Posts

Showing posts from December, 2019

ஒரு நாள் கழிந்தது சிறுகதை - எதிர்வினைகள் 2

கனலியில் வெளியான ஒரு நாள் கழிந்தது சிறுகதை ஒரு பெண்ணின் ஆசை ஆதங்கம் இயலாமை  இவைகளை சுற்றி வருகிறது கதை.அது எவ்வாறு எரிச்சலாக பதற்றமாக கோபமாக பொறாமையாக எதிர்வனையாக வெளிப்படுகிறது என்பதும் அதை நிழலை போல தொடர்ந்து வருகிறது . இதில் பெண் , அதுவும் ஒரு சித்தாள் , அம்மா , மனைவி , நடுத்தர வயது என்று வேறு வால்யூமை நன்றாக கூட்டி வைத்திருக்கிறார் ஆசிரியர் :) கிழவிகளோடும் நிற்க விருப்பமில்லை , கல்லூரி பெண்களோடும் போய் சேர்ந்து நிற்க முடியாது பள்ளி தோழிகள் பார்த்து விடுவார்களோ என்ற பயம் ..அமுதாவும் வராமல் போய்விடுவாளோ என்னும் கைவிடப்படுதலின் தனிமை ... அதுவே அமுதா கடைசி நிமிடத்தில் வரும் போது திடீர்  பாசமாகவும்  மேஸ்திரி அப்புறமா அழுதுகொள் என்றதின் போது ஆழ்ந்த புறக்கணிப்பாகவும் , அந்த பெரியவர் உட்கார்ந்துகொள் என்று சொல்லும்போது கருணையான அடைக்கலமாகவும் அமுதாவிடமிருந்து வெளிப்படுகிறது . மேஸ்திரியை முன்வைத்து அமுதா அபிராமியிடம் நிகழும் அந்த உடைவு பெண்கள் ஏன் பெண்களாக திரள முடியாது என்பதற்கான நல்ல உதாரணம் :)  இந்த சிக்கலான தப்பிக்கவே முடியாத அழுத்தும் சூழலில்...

ஒரு நாள் கழிந்தது சிறுகதை - எதிர்வினைகள் 1

கனலி இதழில் வெளியான ஒரு நாள் கழிந்தது சிறுகதை அன்பின் சுரேஷ் ஒருநாள் கழிந்தது டிபிகல் சுரேஷ் கதை. ஆனால் வழக்கமாக இருக்கும் ஒரு எதிர்பாரா அதிர்ச்சி இதில் இல்லை. அமுதாவின் பாத்திரம் மெல்ல மெல்லத்தான் துலங்கிவருகிறது.. முதலில்  புதிதாக குடிக்க கற்றுக்கொண்ட கொளுத்து வேலைக்கு போகின்றவள் என்று ஒரு குடிசை வீட்டில் குடிகாரக்கணவனுடன் இருக்கும் ஒருத்தியைக்குறித்தான உளச்சித்திரம் ஏற்பட்டிருந்தது. பின்னர் பசுமை வீடு என்றதும் கொஞ்சம் தேவலாம் போல என்று அச்சித்திரம் கொஞ்சம் மெருகேறியது, பின்னர் கேஸ் அடுப்பு, சேமியா பாத்  ,ஒரு நல்ல பள்ளியில் படிக்கும் மகள், தொலைக்காட்சி  சீரியல் பார்ப்பவள்  என்று முதலில் எண்ணியதற்கு முற்றிலும் மாறான ஒரு அமுதாதான் சைக்கிளில் பேருந்துநிலையம் செல்கிறாள். அவள் படித்தவளும்  கூட என்று பேருந்தில் ஏறியதும் தெரிகின்றது.  படித்த அமுதா கட்டிடவேலைக்கு போவது ஆச்சர்யமாகவே இருந்தது. அபிரமியின் பாத்திரம் அச்சு அசல் கொளுத்து வேலைக்கு போகும்  அடுத்த நாளைக்கான வேலையை எப்படியும் உறுதிப்படுத்திக்கொண்டே வீட்டுக்கு திரும்பும் , நான் அன்றாடம்...