இலக்கிய விமர்சனம் - பத்துக் கட்டளைகள் - ஒரு சுயபரிசோதனைக் குறிப்பு
இதுவொரு சுயபரிசோதனைக் குறிப்பு. இணைய ஊடகங்களின் பெருக்கம் இலக்கியத்தின் மீது எத்தகைய தாக்கத்தை செலுத்துகிறது என்ற வகையிலான உரையாடல்களை சில ஆண்டுகளாகவே தொடர்ந்து பார்க்க நேரிடுகிறது. அவ்வுரையாடல்கள் தொழில்நுட்பரீதியான மாற்றங்கள் குறித்துத்தான் அதிகமும் அக்கறை கொள்கின்றனவே தவிர இலக்கிய வாசிப்பு, ரசனை, வாசகனில் படைப்பு உண்டாக்கும் தாக்கம் போன்ற சங்கதிகள் குறித்து அதிகமும் அக்கறை கொள்வதாகத் தெரியவில்லை. எழுதும் முறை மாறியிருக்கிறது. நான் எழுதத் தொடங்கிய காலத்திலிருந்து அலைபேசியைத்தான் பயன்படுத்துகிறேன். பேனா பிடிப்பதற்கு பதிலாக தட்டச்சு செய்யத் தொடங்கியது போல இரண்டு கட்டைவிரல்களை மட்டும் பயன்படுத்தி தற்போது எழுதுகிறோம். இதுபற்றி அதிகம் பேச ஒன்றுமில்லை. இந்த செயற்கை தொழில்நுட்பம் பற்றிய பேச்சுகள் அது இலக்கியத்தை அழித்துவிடுமா இல்லையா என்பதெல்லாம் கூட ஒரு வகையான 'சமகால' மோஸ்தரை ஒட்டிய பேச்சுகள்தானே தவிர அப்பேச்சுகளுக்கும் இலக்கியத்துக்கும் பெரிய தொடர்பில்லை. இலக்கியம் என்பது காலங்காலமாக படைப்பாளியின் உள்ளம் உணரும் உண்மையை மொழியின் ஒரு வெளிப்பாட்டு வடிவத்தில் பொதிந்து வைப்பதாகவே இரு