Posts

பெரியம்மா வீடு

வாய் திறப்பதற்கு  முன் கண் திறந்து விட வேண்டும் என்ற எண்ணம்  வாய்க்கு முதலில் வந்துவிட்டதால்  மூடிய  இமைகளில் விழியுருண்டைகள் அசைந்து கொண்டிருக்க குணா லேசாக வாயைத் திறந்து விட்டான். நெடியுடைய எச்சில்  இடக்கை மணிக்கட்டில் பட்டதும்  துடித்துப்  போய்  எழுந்து கொண்டான். நல்லவேளை  தலையணையில் எச்சில் படவில்லை  என்ற நிம்மதி. பின் பெரியம்மா வீட்டில்  தானே இருக்கிறோம்  என்ற அலட்சியம். மணி ஆறடித்தது. வழக்கத்தை  விட  வெளிச்சம் குறைவு என எண்ணிக்  கொண்டான். டிராயரை முழங்கால்  வரை கழற்றிக்  கொண்டு ஆற்றரெதிரே ஒன்னுக்கடித்தான். மார்பு வரை பாவாடையை  உயர்த்திக்  கட்டி ஆற்றில் குளித்துக்  கொண்டிருந்த பெண்ணொருத்தி பக்கத்தில்  நீந்தியவளிடம் “இங்கேருடி கெலுத்தி மீன சொறுகி வெச்சிருக்கான்” என்றாள். “போடி” என தலையை நொடித்துக்  கொண்டு டிராயரை உயர்த்திக் கொண்டான்  குணா. ஷாலை இடுப்பில்  இறுக்கி முடிந்தவாறு சுகன்யா துவைத்த  துணிகளோடு எதிர வந்தபோது  குணா இடதுகையால் பிரஷ்ஷை வாய்...

அறிதல் தொடங்கும் கணம்

என் அறிதல்  தொடங்கும்  கணத்தில் உருமாறுகிறது உலகு எனக்கென்று  விடிகிறது இவ்விரவு என்னோடு நடக்கிறது  இந்நிலவு ஏதேதோ  சொல்கிறது இக்கனவு என் அறிதல் தொடங்கையில் முடிகிறது இச்சோர்வு இருப்பது  இல்லாமலாக மட்டுமே இல்லாமலிருக்கையில் இருப்பு  தேடியா அலைகிறேன் எவ்வளவு  அள்ளியும் எஞ்சுகிறது ஒரு  துளி எத்தனை  சொல்லியும் மிஞ்சுகிறது  ஒருசொல் எஞ்சுவதும் மிஞ்சுவதும் எனதென்று எடுக்கையில் அள்ளியதும் சொல்லியதும் அண்மிக்கையில் எதை  எடுப்பேன் எதை  தடுப்பேன் சொல்லிவிட முடிவதில்லை சொல்லாமல்  விடவும் முடிவதில்லை அறிதலின்  ஆழ் அழுத்தத்தில் மூழ்கையில் உணர்வாய் ஆழத்தின் வாசத்தையும் அறிதலின்  ஆனந்தத்தையும் அதுவரை உன்  கனவை என் உறக்கத்தில் கண்டுகொள் அல்லது  கொள்ளாதே

அழகி

அழகி அங்குதான். அன்றுதான். அக்கணந்தான். அருகாமையின் அர்த்தம்  புரிந்த கணமது. அறியாமையின்  இன்பம்  நுகர்ந்த நாளது. அவள் எனும் பதத்தை ஒவ்வொரு  நொடியும் ஒருமைக்கு வெளியே இழுக்கிறாள். அவளை அவள்கள் எனலாமா? இலக்கணம்  ஒப்ப மறுக்கலாம். ஆம். அவளொரு கூட்டுக் கனவு. அழகின் அத்தனை  அளவைகளுக்கும்  ஒரு அறைகூவல். முழுமைக்கு வெளியே நின்று கொண்டு முகம் பொத்தி பழிக்கிறாள். அவள் முகம் காணும் நேரம் ஒன்றிலும்  நிறையாமல் உள்ளேங்கும் ஒன்று ஒரு நொடி தன்னை மறக்கும். மறுநொடி ஒளிகொள்ளும். மறுநொடி அரசக் கனவு மீண்ட ஆண்டியென தன்னை சுருக்கி  தன்னுள் ஒடுங்கும். ஆனால் முன்பிருந்த ஒன்று நீங்கியிருக்கும். சோர்வு சூடிக் கொண்ட வாழ்வின் ஒருநாளில்  அனைத்தையும்  உதறியெழுந்து அருவியென வியர்வை  பெருக ஆற்றல்  கொண்டு கடுஞ்செயல் புரிந்து  கண்மூடி காற்றினை உள்ளிழுக்கையில் நிறையும் நெஞ்சத்தின்  உற்சாகம்  அவள் விழிநோக்க கிட்டிவிடும்.  குழப்பங்கள்  குடிகொள்ளும்  ஆழ்மனதை மென்சோக இசையொன்று மென்மையாய்  வருடுகையில் இன்னதென்று  அறியா...

மண்ணும் மழையும்

மண்ணும்  மழையும் 

நான்

நான் 

அம்மாவிடம் சில கேள்விகள்

அம்மாவிடம் சில கேள்விகள்  

இணை

இணை