Posts

ஸ்பைடர்மேனும் அமேசிங் ஸ்பைடர்மேனும்

Image
பத்து வயதில் ஐந்து கிலோமீட்டருக்கு அதிகமான தூரத்தை சைக்கிளில் கடப்பது எனக்கு எண்ண முடியாததொரு கிளர்ச்சியை அளித்திருந்தது. அப்போது எனக்கு சைக்கிள் ஓட்டத் தெரியது. அமர்ந்து செல்வதே கிளர வைத்திருந்தது. அதிலும் பயண நோக்கம் ஸ்பைடர் படம் பார்க்கச் செல்வது. வழக்கமாக பயணிக்கும் கொரடாச்சேரி-கமலாபுரம் சாலை வழியாக இல்லாமல் பாண்டவை ஆற்றின் மறுகரையில் உள்ள ஆலத்தாங்குடி வழியாக அத்திக்கடை சென்று அங்கிருந்து லெட்சுமாங்குடியில் இருக்கும் சாந்தி தியேட்டருக்கு சென்றோம். அண்ணனுடைய தோழர்கள் சிலரும் படத்துக்கு வந்திருந்தனர். பார்த்து முடித்து திரும்பி வருகையில் எப்படியெல்லாம் சிலந்தி மனிதனைப் போல் நடித்துப் பார்ப்பது என்ற கற்பனையிலேயே மூழ்கி இருந்தேன். அவ்வயதில் அத்தகைய பல கற்பனைகள் எனக்கிருந்தன. நண்பர்களுடன் டைம் மிஷினில் ஏறிப் பறப்பது சக்திமானை சந்திப்பது வளைந்த இரும்புக் கம்பியை துப்பாக்கியாக எடுத்துக் கொண்டு தீவிரவாதிகளை அழிக்க இந்திய ராணுவத்துக்கு துணை நிற்பது இப்படி பல. செம்மண் சாலையின் கப்பிக் கற்களில் எங்கள் சைக்கிள்கள் தடதடத்து வரும் போது "தம்பி எப்டி ஸ்பைடர் மேன் ஆவலாம்னு யோசிக்கிறானா?...

கண்ணாடிச் சில்லுகளும் கருங்குழல் நோட்டுகளும் - சிறுகதை

கண்ணாடிச் சில்லுகளும் கருங்குழல் நோட்டுகளும்

ஒளிர்நிழல் - மாற்றங்களின் மோதல்

Image
ஒளிர்நிழலின் முதல் வாசகராகிய திருமதி.மேரி எர்னஸ்ட் கிறிஸ்டி அந்நாவல் குறித்து எழுதிய பதிவு இந்நாவல் முதலில் ஒரு சிந்தித்தலை முன்னிருத்தி ஆரம்பிக்கப்பட்டிருக...

அலுங்கலின் நடுக்கம் - சிறுகதை

பதாகையில் வெளியாகி இருக்கும் என் சிறுகதை அலுங்கலின் நடுக்கம்

ஒளிர்நிழல் - என் முதல் நாவல்

Image
ஹரன் பிரசன்னாவிடமிருந்து ஒளிர்நிழல் வெளியிடப்பட இருப்பதாக என் மின்னஞ்சலுக்கு பதில் வந்தது. நம்ப முடியாத ஒரு மகிழ்ச்சி மனதில் பரவியது. இன்று ஒளிர்நிழலை நூலாக பார...

சரஸ்வதி ஒரு நதியின் மறைவு - மிஷல் தனினோ(தமிழில் - வை.கிருஷ்ணமூர்த்தி)

Image
ஆர்குட் பத்தாண்டுகளுக்கு முன்பிருந்து இணையத்தைப் பயன்படுத்துபவர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பிருக்கும் ஒரு சமூக வலைதளம். மின்னஞ்சலில் இன்றும் கோலோச்சும் ஜிமெயிலின் பகுதி. ஆனால் அது நிறுத்தப்பட்டுவிட்டது. அடிப்படையில் ஆர்குட்டைப் பற்றித் தெரிந்தவர்களின் வியப்பு நேரடியாக முகநூலையும் இன்னபிற சமூக வலைதளங்களையும் பயன்படுத்துகிறவர்கள் அடைகிற பரவசத்தை விட குறைவாகவே இருக்கும். ஏனெனில் அவர்களுக்கு "தொடக்கம்" பற்றிய ஒரு கணிப்பு இருக்கிறது. ஆகவே இந்த தொடக்கத்தை அறிந்தவர்கள் எந்தவொரு சாதனையையும் "முன்னகர்தலாகவே" பார்ப்பார்கள். "முன்னுதாரணங்களற்ற" என்ற வார்த்தையை எப்போதும் சந்தேகத்துடனே அணுகுவார்கள். ஆனால் பெரும்பாலும் இத்தகையவர்கள் சோர்வூட்டுகிறவர்களாகவே இருக்கிறார்கள். ஏனெனில் பரவசத்துடன் எதைப்பகிர்ந்து கொள்ளச் சென்றாலும் அந்தப் பரவசத்தை குறைக்கும் வகையில் அதற்கு முன்னர் அதே மாதிரி நடந்த ஒரு சம்பவத்தை சொல்வார்கள். அதிலிருந்து இது எப்படி நடந்தது என்பதை விளக்குவார்கள். உண்மையில் இந்த பார்வையே சரியானது. ஏனெனில் நம்மில் பெரும்பாலானவர்கள் இன்று ஒரு "தலைப்புச் ச...

நவீன இந்தியாவின் சிற்பிகள் - ராமச்சந்திர குஹா (தமிழில் - வி.கிருஷ்ணமூர்த்தி)

Image
ஏழாம் வகுப்பு சமூக அறிவியல் புத்தகம் தான் வரலாற்றின் மீது எனக்கொரு ஈர்ப்பை ஏற்படுத்திய முதல் நூல். மன்னர்கள் அவர்களின் ஆட்சிப் பரப்பு ஆண்ட வருடங்கள் எதிர்கொண்ட போர்கள் மேற்கொண்ட சீர்திருத்தங்கள் செய்த குளறுபடிகள் என்று வரலாறு ஒரு பெரும் புனைவாக (grand fiction) என் நினைவில் நின்றிருந்தது. ஆனால் வருடங்களை நினைவில் நிறுத்துவது எளிமையானதாக இல்லை. இருந்தும் இந்திய வரலாறு குறித்தும் தமிழக வரலாறு குறித்தும் ஒரு தோராயமான பொதுச் சித்திரம் மனதில் உருவாகி இருந்தது. பெரும்பாலானவர்களுக்கு துல்லியமாகவோ தோராயமாகவோ அத்தகையதொரு வரலாற்று சித்திரம் இருக்கவே செய்யும். ஆனால் வரலாறு காலத்தில் நெருங்கி வர வர அறிவு சார்ந்ததாக இல்லாமல் ஆகிறது. வரலாற்று விசைகளோடு நம் நாடு நம் மொழி நம் சாதி நம் மதம் அல்லது நம் குலதெய்வம் கொண்டிருந்த தொடர்பென்ன ஆற்றிய பங்களிப்புகள் என்னென்ன அடைந்த லாப நஷ்டங்கள் என்ன என்று தேடத் தொடங்கி விடுகிறோம். தூரத்தில் இருக்கும் போது ஒரு திரைக்கு பின் நடக்கும் படம் போல வரலாறு நம்மை கொந்தளிக்கச் செய்கிறது மயிர்கூச்செறிய வைக்கிறது சிந்திக்க வைக்கிறது விழுமியங்களை கற்றுக் கொடுப்பதாக இருக்கிறத...