Posts

காந்தி - தன்முழுமையின் செயல் வடிவம்

Image
2012ஆம் ஆண்டு இளங்கலை பொறியியல் முடித்து என்ன வேலையும் கிடைக்காமல் என்ன செய்வதென்று தெரியாமல் கல்லூரியைவிட்டு வெளியேறி வீட்டில் கிடந்த சமயம் அண்ணன் ஆசிரியராக பணிபுரிந்து ஓஎம்டி மெட்ரிகுலேஷன் மேல்நிலை பள்ளியில் சில மாதங்கள் மேல்நிலை வகுப்பு மாணவர்களுக்கு இயற்பியல் பாடம் எடுக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்பள்ளியில் இயற்பியல் பாடமெடுத்த ஆசிரியர் எதிர்பாராத விடுப்பில் சென்றிருந்ததாலும் மாணவர்களுக்கு உடனடியாக ஒரு ஆசிரியர் தேவைப்பட்டதாலும் இந்த தற்காலிக ஏற்பாடு.  பொறியியல் படித்தவன் பள்ளி மாணவர்களுக்கு இயற்பியல் எடுப்பது ஒரு மெல்லிய ஏளனப்பார்வையையும் என் மீது படரவிட்டிருந்தது அப்போது. அடுத்த ஆண்டு நடைபெற இருந்த கேட் (Graduate Aptitude Test for Engineering என்பதன் சுருக்கம்) தேர்வுக்கு படித்துக் கொண்டு குனிந்த தலை நிமிராமல் பள்ளிக்கு சென்று வந்து கொண்டிருந்த நாட்கள் அவை. யாரும் ஏதேனும் சொல்லி விடுவார்களோ என்ற பதற்றம் எப்போதும் மனதில் இருந்தது. பாடமெடுத்தது போக மற்ற நேரங்களில் அந்த பள்ளியின் ஆசிரியர்கள் அறையில் யாருடனும் அதிகமாக பேச்சு கொடுக்காமல் ஏதேனும் புத்தகத்தை எடுத்து தலைகவிழ்ந்தபடிக்...

சேப்பியன்ஸ் - உலகத்தின் கதை

Image
பெருங்கதையாடல்கள் மீது பின்நவீனத்துவர்களுக்கு ஒருவித விலகலான பார்வை இருக்கும். அதற்கு அவர்கள் சொல்லும் காரணத்தை இவ்வாறாக தொகுத்துக் கொள்ளலாம். பேரரசுகளும் ஏகாதிபத்திய அரசுகளும் பெருங்கதையாடல்கள் மீதே தங்களுடைய அடித்தளங்களை அமைத்தன. அக்கதையாடல்களை மக்களை நம்பச் செய்ததன் வழியாக அவர்களை முடிவில்லாமல் சுரண்டி சமூகத்தின் மிகச்சிறு பகுதியினர் மட்டுமே நலம்பெறும்படியான ஒரு அரசினை ஏகாதிபத்தியங்கள் அமைத்துக் கொண்டன. ஆகவே ஒவ்வொரு பெருங்கதையாடலுக்குப் பின்னும் இருப்பது சர்வதேசக் கனவல்ல சர்வாதிகாரக் கனவே என்று அத்தரப்பு வாதிடும். சர்வதேச ராஜ்ஜியத்தை முன்வைத்து இயங்கிய கிறிஸ்துவம் இஸ்லாம் போன்ற மதங்களையும் பிரிட்டிஷ் அரசு போன்ற ஏகாதிபத்தியங்களையும் இப்பெருங்கதையாடல்களுக்கு நாம் உதாரணங்களாகச் சுட்ட முடியும். பெருங்கதையாடல்கள் அதிகாரத்தை மையம் நோக்கி குவிக்கின்றன. அந்த மையத்துடன் இசைவு கொள்ளாதவர்களை அக்கதையாடலின் மையத்தில் இருப்பவர்கள் ஒடுக்கிறார்கள்.  நடைமுறை அறிவும் இத்தகைய பெருங்கதையாடல் கொண்ட மதங்களும் அரசுகளும் பெரும் அளவிலான வன்முறையை விளைவித்திருக்கின்றன என்று நமக்கு காட்டுகின்றன. அப்படியெ...

சீர்மை குறித்து கதிரேசன்

நதிக்கரை இலக்கிய வட்டத்தின் இம்மாதக்  கூட்டம் இன்று(30.12.2018) திருவாரூர் மாவட மைய நூலகத்தில் நடைபெற்றது. இம்முறை இளம் எழுத்தாளராகிய அரவிந்தனின் சீர்மை நாவல் பேசுவதற்க...

முன்னுரை - எஞ்சும் சொற்கள்

Image
கிழக்குப் பதிப்பக வெளியீடாக வரவிருக்கும் என் இரண்டாவது சிறுகதை தொகுப்புக்கான முன்னுரை கரைசேர்ந்தவை பியோதர் தஸ்தாவெய்ஸ்கியின் குற்றமும் தண்டனையும் நாவல் குறித்து செப்டம்பர் 2017ல் என் தளத்தில் ஒரு கட்டுரை எழுதினேன். அக்கட்டுரை வெளியான அன்றே எழுத்தாளர் கே.என்.செந்தில் அலைபேசியில் தொடர்பு கொண்டார். இரண்டாயிரத்துக்குப் பிறகு எழுத வந்த எழுத்தாளர்களில் மிக முக்கியமானவர் என நான் எண்ணும் ஒருவர் அழைத்துப் பேசுவது மிகுந்த மனநிறைவை கொடுத்தது. அதோடு இலக்கியம் குறித்த கறாரான மதிப்பீடுகள் கொண்ட ஒருவரிடம் பேசுவதால் ஏற்படும் மெல்லிய பதற்றமும் அவ்வுரையாடலின் போது இருந்தது. கபாடபுரம் இதழுக்காக ஒரு சிறுகதை அல்லது கட்டுரை எழுத வேண்டும் என கே.என்.செந்தில் கேட்டார். என் அலுவலகத்தில் தோழி ஒருவருக்கு நிகழ்ந்த ஒரு அனுபவம் மனதின் ஒரு மூலையில் அப்போது கதை வடிவம் கொள்ளத் தொடங்கியிருந்தது. அந்த நம்பிக்கையில் சில வாரங்களில் கதையை எழுதி அனுப்புவதாக ஒப்புக் கொண்டேன். அதன்பிறகே ஒருவருடைய தனிப்பட்ட அனுபவத்தை அதுவரை கதையாக்கியதில்லை என்பதும் நான் மதிக்கும் ஒரு எழுத்தாளர் என்னிடம் இப்படியொரு கோரிக்கையை வைத்ததில்ல...

ஈர்ப்பு - பகுதி இரண்டு

6 வெகு நேரமாக அடக்கி வைத்திருந்த இருமல் வலுவாகத் தாக்கியது. கணினியின் முன் அமர்ந்திருந்தவன் கீபோர்டில் தலை வைத்து சரிந்து விட்டான். அறை எந்த ஒழுங்கும் இல்லாமல் ...