ஈசல் - எதிர்வினைகள் 1
ஈசல் கதையைப் படித்தேன். சில்ற ,பொன்னுலகம் கதைகள் வரிசையில் வைக்கக்கூடிய கதை. ஆனால் இது அவை இரண்டையும் விட முக்கியமானது. கடைசி வரியை மட்டும் தவிர்த்திருக்கலாமோ என்று முதலில் தோன்றியது. பிறகு அதுவும் சரிதான் என்று சமாதானம் உண்டாகிவிட்டது. எதிர்கால தொழில்நுட்ப வளர்ச்சி பற்றிய கற்பனைகள் / கவலைகள் மிகையாகும்போது சலிப்பு ஏற்படுகிறது. இதில் வரும் அறிக்கை கொஞ்சம் அப்படி எண்ண வைத்தது. நினைவின் சுமை பற்றி அவ்வப்போது யோசிப்பதுண்டு. ஞாபகங்கள் மனிதனுக்கு பலமா பலவீனமா என்ற குழப்பம் தீரவில்லை. சலபதி ஒரு இடத்தில் பேசும்போது இந்தக் கதையில் கடைசியில் வரும் கடவுளின் இருப்பிடம் போன்ற ஓர் இடம் சூரியப் புயலில் சேதமடைந்தால் ஏற்படும் இழப்பு பற்றிக் கூறினார். அதுவும் இதேபோன்ற ஒரு கதைக்கான தொடக்கப் புள்ளியாக இருக்கலாம்.
ஶ்ரீனிவாச கோபாலன்
*****
சிறுகதை அற்புதமாக வந்துள்ளது. படித்ததும் ஒருவித நடுக்கம் ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை. ஒரு அபாயத்தை முன்னறிவிப்பு செய்வதுபோல் இருக்கிறது.
வாழ்த்துக்கள் 💐
நன்றி!
காமராஜ் மணி
*****
நிச்சயமாக இது ஒரு பாய்ச்சல் தான். முடிவில் இறைவன் தானாகவே உருவாக்கப்பட்டிருப்பதை அறியும் போது அதிர்ச்சி உருவாகவில்லை. என்ன அது AI மூலமாக உருவாக்கப்பட்டது அழிப்பது சாத்தியமில்லை. 😀❤️😀
இறைவன் உருவகம் மிகப் பொருத்தமாக அதன் காரணங்களோடு பண்டைய புராண காரணங்களான படைத்தல் அழித்தல் ஆக்கம் போன்ற கருதுகொள்களை அடிப்படையாகக் கொண்டு தானே உருவாகியிருக்கிறது. இந்த இறைவனை அஃறிணையில் தான் சொல்ல முடியும்.
எம்.தண்டபாணி
Comments
Post a Comment