Posts

பரிசுப்பொருள் - சிறுகதை

பாண்டவையாற்றை குறுக்காகக் கடந்த கமலாபுரம் பாலத்தில் வெயில் விரிந்து கிடந்தது . மோனிகா பயணப்பையுடன் கமலாபுரத்தில்  இறங்கிய போது சாலையில் பரவலாக தேங்கியிருந்த மழைநீர் காலைச் சூரியன் பட்டு அவள் கண்களை கூசச் செய்தது. புறங்கையை கண்களுக்கு நேரே நீட்டிக் கொண்டு நின்று பேருந்தில் வந்ததால் ஏற்பட்ட உடற்சமநிலையின்மையை சரிபடுத்த முயன்றாள்.  கை மூட்டுகளிலும் விரல் பொருதுகளிலும் உடலிலும் மெல்லிய உலைச்சல் எடுக்க நின்றபடியே சோம்பல் முறித்தாள்.  ரொம்ப சாயக்கூடாது என்பது நினைவிற்கு வர அப்படியே நின்றுவிட்டாள். உடலில் ஒரு சமநிலையின்மை சில கணங்கள் நீடித்தது. இருந்தாலும் ஒரு  விடுதலையை உணர முடிந்தது. வெறுமையுடன் புன்னகைத்துக் கொண்டாள். அவளெதிரே வந்து நின்ற சன்ஸ்கிரீன் ஒட்டப்பட்ட ஃபார்சூனர் காரில் முகத்தைப் பார்த்தாள். சிகையை பின்னுக்குத் தள்ளி விலகியிருந்த சிறிய ஸ்டிக்கர் பொட்டினை நெற்றி நடுவே அமைத்தபோது முகம் பொலிவுற்றது. அவள் முகம் திருப்தியைக்காட்ட அதற்கெனவே நின்றிருந்தது போல அந்த ஃபார்ச்சூனர் கடந்து சென்றது. ஓரக்கண் சற்று தூரத்தில் பழக்கப்பட்ட உடலசைவுகளை காட்டியது. சிவக்குமார் தான். ச...

காத்திருத்தல் - குறுங்கதை

நான் ரொம்ப நேரமாக காத்துக் கொண்டிருக்கிறேன். இன்னும் அவர் வரவில்லை. நான் காத்துக் கொண்டிருந்த அறையில் ஒரேயொரு ஜன்னல் திறப்பு இருந்தது. அத்திறப்பில் இருந்து எதிரே இருக்கும் ஆளில்லாத உயரமான கட்டிடங்களைப் பார்க்க முடிந்தது. நான் தரைத்தளத்தில் இல்லை  என்பதை அடிக்கடி ஞாபகப்படுத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது. அந்த அறை இருப்பது ஒரு பெரிய அடுக்ககத்தில் என்பது தெரிகிறது. எதிரே உள்ள ஜன்னல் வழியே தெரியும் கட்டிடம் போன்ற அமைதி நான் அமர்ந்திருக்கும் அறை இருக்கும் அடுக்ககத்தில் இல்லை. அறைக்கு வெளியே விதவிதமான சத்தங்கள் கேட்கின்றன. கதவை எழுந்து சென்று திறக்கலாம்தான். ஆனால் திறக்கப் பிடிக்கவில்லை அலுப்பாக இருக்கிறது. மேலும் நான் காத்திருக்கிறேன். காத்திருத்தல் என்ற வேலையில் ஈடுபட்டிருக்கும் போது ஏன் இன்னொரு தேவையில்லாத வேலையில் தலையை நுழைக்க வேண்டும்? இப்படி தலையை நுழைப்பது சரி கிடையாது. ஏனெனில் அது நம்மை இன்னொரு செயலுக்கு இட்டுச் செல்லும். மனதை நிலைக்க விடாமலடிக்கும். இப்படி அமர்ந்து கொண்டு இந்த அறையையும் ஆளரவம் அற்ற எதிர் கட்டிடங்களையும் பார்த்துக் கொண்டிருப்பதால் என்ன குறைந்துவிடப் போகிறது? இந்த...

பூரணி சிறுகதை குறித்து மணிகண்டன்

பூரணி சிறுகதை அன்புள்ள சுரேஷ்  பூரணி மோகமுள் நாவலை படித்திருப்பார் என்று எழுதி உங்களை வெறுப்பேற்ற ஆசையாக இருக்கிறது. நல்ல சீரான நடையில் எந்த வித குழப்புமின்றி கதை முடிகிறது. மிகவும் ரசித்து படித்தேன். ஒளிர் நிழல் குறித்து முன்னர் உங்களுக்கு கடிதம் எழுதியிருக்கிறேன்.பூரணி கதையால் பாதிக்கப்பட்டேன் என்று கூற இயலாது, எனினும் நீங்கள் ஆளுமை சிக்கல் குறித்த பல நுட்பமான இடங்களை இந்தக் கதையில் பல இடங்களில் உராய்ந்து சென்றுள்ளீர்கள். நல்லது.  நட்பு இருப்பதிலேயே  எளிதானது நமது தேர்வின் வழி நாம் தேர்ந்தெடுக்கும் நமது நண்பர்களுக்கும் நமக்கும் உள்ள உறவை புரிந்து கொள்வது. நம் தேர்வின் வழி வருவதால் நமக்கு பிடித்தமானது அதே நேரத்தில் நண்பர்களின் மாற்று பார்வை நாம் ஆளுமையில் உராய்கையில் நாம் என்ன மாதிரி உணர்கிறோம், நட்பை எவ்வாறு தொடர்கிறோம் என்பதே நாம் ஆளுமையில் ஒரு பகுதியாகிறது. கதையில் விக்னேஷின் நண்பன் கசப்பான ஒன்றை கூறினாலும் அது மரபார்ந்த ஒன்றுக்கு அருகில் இருக்கிறது. மரபு  நாம் காலங்களின் அடுத்த சிக்கல் நாமே விரும்பி அணிந்து கொள்ளும் முற்போக்கு பாவனை , சமூக ஊடகங்கள் வழி இந்த பாவன...

ஸ்ரீராம ஜெயம்

Image
தி.ஜானகிராமனின் சிறுகதைகள்(முழுத்தொகுப்பு) வாசித்து வருகிறேன். சரளமாக வாசித்துச் செல்லக்கூடிய கதைகள். நவீனத்துவத்தின் இறுக்கம் கவிந்துவிடாத நேரடியான கூறல்  கொண்ட கதைகள். பெரும்பாலான கதைகளில் பசி முக்கிய பங்கு வகிக்கிறது. பாயாசம்,பரதேசி வந்தான்,கோயம்புத்தூர் பவபூதி,பஞ்சத்து ஆண்டி,குளிர், சிலிர்ப்பு என பல கதைகளில் வறுமையின் கையறு நிலை அப்பட்டமாக வெளிப்படுகிறது. மற்றொரு வகையான கதைகளில் காமத்தின் அலைகழிப்புகள் பேசு பொருளாகி இருக்கின்றன. பெரும்பாலும் வாலிப்பான உடல் கொண்ட இளம் விதவைகள் மீதான பச்சாதாபம் இக்கதைகளில் வெளிப்படுகிறது.சண்பகப்பூ, பசி ஆறிற்று, தூரப்பிரயாணம்,தவம்,ஆரத்தி போன்றவை இவ்வகை கதைகள். ஆனால் தி.ஜாவின் ஆகிருதி முதல் வகைக் கதைகளிலேயே பூரணமாக வெளிப்படுவதாகத் தோன்றுகிறது.  எளியோரின் பசி கண்டு துயர் கண்டு இரங்கும் அவர்களின் கையறு நிலையை கனிவுடன் எடுத்துச் சொல்லும் முதல் வகைக் கதைகளே அவர் எழுதியவற்றில் முக்கியமானவை என்று நினைக்கிறேன். பெரும்பாலும் கதைகள் நேரடியாகவே சொல்லப்பட்டிருந்தாலும் ஸ்ரீராமஜெயம் என்ற கதை அதன் மௌனத்தால் தொடர்புறுத்தும் தன்மையால் அபாரமான கலைப்பெறுமானம் ப...

:) :( - குறுங்கதை

Image
12 MAY 2020 (2.02AM) Dei thoonkittiya illa di :) Mani rendaguthu. Innum thoongama enna da panra En rendu manikku thoonkidanuma? Nee ivlo neram enna panriyam? Enakku hubby irukkan athanala thoongala :( Enna pannineenga Ellam night la panrathu than (அவள் போர்வைக்கு வெளியே தெரிந்த தன் கால்களையும் தன் கணவன் கால்களையும் படம் எடுத்து அனுப்பினாள்) Nude a irukkiya Ama ethukku kekkura? Chumma imagine panna than. Eppavum matter pannittu nude a than thoonguviya? Dei uthai vanguva? Chumma sollu di Kobama? Athellam illa Appo sollu Avan thoongiduvan. Naan konja neram yosichuttu paduththuruppen. Appuram nighty pottu thoonguven. Oh Enna "oh" Sari kobapadatha. Dei inime ithu paththi yellam kekkatha. Ketta enna? Kekkathanna viden En kekka kudathu nu sollu Ithu enga personal Oho Enna da oho Appo avan tarture panrathu mattum enkitta sonna *torture Athukku nu avan matter panrathaiyum unkitta sollanum Enna da pesa matra? Nee...

ஒளிர்நிழல் குறித்து அ.க.அரவிந்தன்

Image
அன்புள்ள சுரேஷ் பிரதீப் அவர்களுக்கு, நாவல் வாசித்த பின்னர் 'ஒளிர்நிழல்' பற்றிய பிறர் கருத்துக்களை பார்த்தேன் .அதில் ரஞ்சனி பாசு அவர்கள் எழுதிய கருத்துக்களும் என் அவதானிப்புகளும் சற்றே ஒத்திருந்தது.அதனால் அதில் சொல்லப்பட்டதை தவிர்த்து வேறு சில கருத்துகளை எழுத விழைகிறேன். புயலிலே ஒரு தோணியில் ஆவன்னா என்ற ஒரு அத்தியாயமுண்டு.அதில் அந்த கதாபாத்திரம் ஒரு பெருங்கதையை சொல்லும்.எழுச்சி பெற்று வீழ்ச்சி அடைந்த ஒரு கதை அது.அதுதான் நாவலின் அடிநாதமென எனக்கு தோன்றும்.அதுதான் நாவலிலே நீண்ட அத்தியாயம் என்றும் நினைக்கிறேன். ஒளிர்நிழல் படித்தபோது அந்த நினைவு எட்டிப்பார்த்தது.ஆனால் இங்கு வீழ்ச்சியை மட்டும் அல்லது வீழ்ச்சிக்கு பின்னர் என்று நான் வரையறுத்துக்கொள்கிறேன். காத்தவராயன்,ராஜகோபால தேவர் சித்திரத்தை வைத்து இதை செய்கிறேன். எஞ்சும் சொற்கள் முன்னுரை என்று நினைக்கிறேன். நீங்கள் கதை சொல்லும் யுத்திக்கு முக்கியத்துவம் தருபவன் அல்ல என்று சொன்னீர்கள்.நாவலை படிக்கும் எவருமே அதை ஆமோதிக்கமாட்டார்கள் என்று நினைக்கின்றேன். ஒரு பெரிய வேலியமைத்து அதனுள்ளே நீங்கள்  மாட்டி, பின்னர் வெகுல...

கற்றாழைக் கிணறு - எதிர்வினைகள்

கற்றாழைக் கிணறு - சிறுகதை கற்றாழைக் கிணறு சிறுகதை குறித்து அரவிந்தன் அன்புள்ள சுரேஷ் பிரதீப் அவர்களுக்கு: இரவு நேரங்களில் பேய் கதை கேட்பதே ஒரு பரவச உணர்வு. அதை விட ஒரு படி மேல் நாட்டார் தெய்வங்களின் கதை கேட்பது.அவற்றை வழிபடும் முறை ஒரு அமானுஷ்ய நிகழ்வே.சுநில் அவர்கள் 'குருதி சோறு ' கதையில் எழுதியதை போல.காட்டேரி முதலியவை தெய்வமா ? பேயா ? என்ற சந்தேகம் பலருக்கும் உண்டு என்று தான் நினைக்கிறேன். கதையின் ஆரம்பத்தில் ஒரு கிராம தெய்வ கதையென்றே நினைத்தேன்.ஆனால் இது ஒரு பேய் கதையும் கூட.தொடர்ந்து பலி கேட்கும் உயிர் குடிக்கும் கதை.ரத்தம் குடித்து குடித்து கள்ளி கற்றாழையாக, அதாவது ஒரு பேய் ,தெய்வமாக மாறும் இடம்.உண்மையில் குறத்திக்கும்(வள்ளி) ,மயிலுக்கும்(முருகன்) உள்ள இணைவு அவளை முன்பே ஒரு தெய்வத்தன்மை படுத்துகிறது. மாணிக்கம், மூங்கில்வீரன்,கேசவன் மூவரும் ஒன்றே என்று படுகிறது.ஏனெனில் குறத்தி சாகும் முன்னர் மூங்கில்வீரனை சபிக்கவில்லை தன்னவனை சபிப்பதாகும் என்று அவள் நினைத்திருப்பாளோ? என்னவோ? தேடுபவருக்கு உண்மை ஒரு சிறு ஒளியுடன் கதைவை திறந்து வைத்துக்கொண்டு காத்துக்கொண்டே இருக்க...