Posts

ஈசல் - எதிர்வினைகள் 2

ஈசல் சிறுகதை   ஈசல் - எதிர்வினைகள் 1 ஈசல் என்றொரு சிறுகதை வாசித்தேன். கொஞ்சம் விஞ்ஞானம், கொஞ்சம் தத்துவம், கொஞ்சம் சமூகம், கொஞ்சம் மானுடம் எனச் செல்லும் பிரமாதமான எதிர்காலக் கதை.   பல காலமாக சுரேஷ் ப்ரதீப்பின் பதிவுகளை வாசித்துக் கொண்டிருந்தாலும், அதன் வழி 2010க்குப் பின் எழுத வந்தோரில் எனக்குப் பிடித்தவராக இருந்தாலும், மனதளவில் அவருடன் ஒரு வித நெருக்கம் / மதிப்புக் கொண்டிருந்தாலும், நான் படிக்கும் அவரது முதல் புனைவாக்கம் இதுவே. அவர் தொழில்நுட்பம் அல்லாத துறையில் பணியில் இருக்கிறார். ஆனால் ஓர் AI செயலியின் சாத்தியங்களைப் புரிந்து கொண்டு அதன் எதிர்காலத்தைச் சிறப்பாகக் கற்பனை செய்திருக்கிறார் என்பதே என் வியப்பு.  நிச்சயம் வாசியுங்கள். எழுத்தாளர் சரவண கார்த்திகேயன் (முகநூலில்) ஒரு 20 வருடங்களுக்கு முன்பாக ஆனந்த விகடனில் சரத்குமார் அவர்களின் ஒரு பேட்டி வெளியாகியிருந்தது. அவரிடம் இருந்த செங்கல் போன்ற செல்போனைப் பற்றியது அது. அதைப்பற்றி அவர் அவ்வளவு விதந்தோதிப் பேசியிருந்தார். அவருக்கு அழைப்பு வந்தாலும், அவரே அழைத்தாலும் பணம் கட்டவேண்டும். இவ்வளவு செலவேறியது தேவையா என்று க...

ஈசல் - எதிர்வினைகள் 1

ஈசல் சிறுகதை ஈசல் கதையைப் படித்தேன். சில்ற , பொன்னுலகம்  கதைகள் வரிசையில் வைக்கக்கூடிய கதை. ஆனால் இது அவை இரண்டையும் விட முக்கியமானது. கடைசி வரியை மட்டும் தவிர்த்திருக்கலாமோ என்று முதலில் தோன்றியது. பிறகு அதுவும் சரிதான் என்று சமாதானம் உண்டாகிவிட்டது. எதிர்கால தொழில்நுட்ப வளர்ச்சி பற்றிய கற்பனைகள் / கவலைகள் மிகையாகும்போது சலிப்பு ஏற்படுகிறது. இதில் வரும் அறிக்கை கொஞ்சம் அப்படி எண்ண வைத்தது. நினைவின் சுமை பற்றி அவ்வப்போது யோசிப்பதுண்டு. ஞாபகங்கள் மனிதனுக்கு பலமா பலவீனமா என்ற குழப்பம் தீரவில்லை. சலபதி ஒரு இடத்தில் பேசும்போது இந்தக் கதையில் கடைசியில் வரும் கடவுளின் இருப்பிடம் போன்ற ஓர் இடம் சூரியப் புயலில் சேதமடைந்தால் ஏற்படும் இழப்பு பற்றிக் கூறினார். அதுவும் இதேபோன்ற ஒரு கதைக்கான தொடக்கப் புள்ளியாக இருக்கலாம். ஶ்ரீனிவாச கோபாலன் ***** சிறுகதை அற்புதமாக வந்துள்ளது. படித்ததும் ஒருவித நடுக்கம் ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை. ஒரு அபாயத்தை முன்னறிவிப்பு செய்வதுபோல் இருக்கிறது.  வாழ்த்துக்கள் 💐  நன்றி! காமராஜ் மணி *****  நிச்சயமாக இது ஒரு பாய்ச்சல் தான். முடிவில் இறைவன் த...

ஈசல் - சிறுகதை

Image
கண்கொடுத்தவனிதம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் திருநெல்வேலியில் இருந்து வந்திருந்த ஒரு இளம் பெண் மருத்துவர் பணிபுரிந்தார். அழுக்காகவும் பரிதாபமாகவும் இருக்கும் சிறுவர்களான எங்களைப் பார்க்கும் அரசாங்க மருத்துவர்கள் எரிச்சலும் இரக்கமும் கொள்வது இயல்பு. ஆனால் இந்தப் பெண் எங்களை அருகில் அழைத்து வைத்துப் பேசினார்.  'மாத்திரை எல்லாம் ஒழுங்கா போடணும் சரியா?' 'தினமும் தலைக்கு ஊத்திக்கணும் சரியா?' 'தலைக்கு எண்ணெய் வைக்கணும் சரியா?' அவருடைய ஒவ்வொரு 'சரியா'வும் அவ்வளவு அழகாக இருக்கும். பொதுவாக நான் பிறந்த ஊரான திருவாரூரில் 'ச'வை 'ஸ' போலத்தான் உச்சரிப்போம். அதனாலோ என்னவோ அவர் அழுத்தந்திருத்தமாக 'ச'(Cha) உச்சரிப்பது எனக்குப் பிடித்துப்போனது. இளைஞனாகிவிட்ட பிறகு அந்த உச்சரிப்பில் தொனிக்கும் கொஞ்சலும் வாஞ்சையும் மனநிம்மதியைக் கெடுப்பதாகிவிட்டன. அதனாலோ என்னவோ எங்கள் நிறுவனம் உருவாக்கிய செயற்கை நுண்ணறிவுசார் செயலிக்கு ChattAI என்று பெயரிட்டேன். செயலியின் சின்னமாகவும் ஒரு கோட்டோவியம் போன்ற சட்டைதான் இருந்தது. செயலி உருவாக்கிய ஒரு வருடத்திற்குள்ளாகவே ஒர...

புக் பிரம்மா தென்னிந்திய இலக்கிய விழா - 2024

Image
இ ரண்டு மாதங்களுக்கு முன்பு பாவண்ணன் இப்படி ஒரு இலக்கியவிழா நடைபெறுவதாகச் சொல்லி என்னைக் கலந்து கொள்ள அழைத்தபோது நான் பல வருடங்களாக இந்த இலக்கியவிழா பெங்களூருவில் நடப்பதாகவே எண்ணி இருந்தேன்.‌ பேஸ்புக்கில் நடந்த 'என்னை அழைக்கவில்லை உன்னை அழைக்கவில்லை' சர்ச்சை வந்தபோது கூட இதற்கு முன் இப்படியொரு சர்ச்சை வந்ததிராதது எனக்கு உரைக்கவில்லை. அப்படி எனக்கு உரைக்காமல் போனதில் வியப்பென்றும் ஏதுமில்லை. அப்படி 'உள்ளாழ' சதி நடக்கும் அளவுக்கு எல்லாம் தமிழ் இலக்கியம் 'வொர்த்' இல்லை. 'வொர்த்' என்பதை இங்கு பொருளியல் மதிப்பு என்று புரிந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன். தமிழ்ப் புத்தகங்களுக்கு பெரிதாக சந்தை மதிப்பு இல்லாதபோது இவ்வாறு 'சதி' செய்துதான் தன்னுடைய படைப்புகளை முன்னிறுத்த வேண்டிய அவசியமே இல்லை. ஆகவே இலக்கிய சர்ச்சைகளில் சொல்லப்படும் சதிக் கோட்பாடுகளில் எனக்குப் பெரிதாக ஈடுபாடு இல்லை. ஆரம்பத்தில் ஒரு சுவாரஸ்யத்துக்காக இதையெல்லாம் தெரிந்து கொண்டேன். ஆனால் இன்று அந்த சுவாரஸ்யமும் போய்விட்டது. மீண்டும் மீண்டும் ஒரே மாதிரியான முறையிடல்கள். கோபங்கள்.‌  வெள்ளி...

சாரு நிவேதிதாவை வாசித்தல் 2

Image
எக்ஸைல் நாவலில் இடம்பெறும் சித்தரிப்பு. குணரத்தினம் என்றொருவரை எக்ஸைலின் கதை சொல்லியான உதயா ஃப்ரான்ஸில் சந்திக்கிறான். (சாருவின் பிற நாவல்களைப் போல ஏகப்பட்ட கிளைகளாகப் பிரிந்தாலும் இப்பெருநாவலிலும் கதை சொல்லி ஒருவன்தான்). குணரத்தினம் ஒரு இலங்கைத் தமிழர். இலங்கையில் பேராசிரியராக இருந்தவர். உதயாவிடம் நான்கு நாட்களாகப் பேசிக் கொண்டே இருக்கிறார். தகவல்கள் துல்லியமாக அவர் பேச்சில் வந்து விழுகின்றன. உதயாவிற்கு கழிப்பறை செல்லும் நேரம் தவிர பிற நேரங்களில் அந்தப் பேச்சிலிருந்து விடுதலையே கிடைப்பதில்லை. குணரத்தினம் ஒரு மார்க்ஸியரும்கூட.  அவர் வீட்டில் தங்கி இருக்கும்போது மூன்றாம் நாள் இரவு உதயாவுக்கு ஒரு கனவு வருகிறது. அவன் எங்கோ கடத்திக் கொண்டு போகப்படுகிறான். தான் கொல்லப்படப் போகிறோம் என்பது அவனுக்கு உறுதியாகத் தெரிகிறது. அதோடு மூத்திரம் வேறு முட்டுகிறது. தன்னை விட்டுவிடும்படி கெஞ்சுகிறான். தான் செய்த எல்லாத் தவறுகளுக்கும் மன்னிப்பு கேட்கிறான். இனி எழுதவே போவதில்லை, உயிரோடு மட்டும் விடுங்கள் அதோடு மூத்திரம் பெய்யவும் அனுமதியுங்கள் என்று கெஞ்சுகிறான். அவனுடைய கால்சராய் நனைந்து போயிருக்கிறது...

சாரு நிவேதிதாவை வாசித்தல் 1

உத்தேசமான நினைவுதான். Newshunt என்றொரு செயலி பத்து வருடங்களுக்கு முன்பு பிரபலமாக இருந்தது. அந்தச் செயலில் ஒரு ரூபாய் இரண்டு ரூபாய் என்று கட்டி நூல்களை வாசிக்க முடியும்‌. நான் ஜீரோ டிகிரி நாவலை அப்படித்தான் வாசித்தேன் என நினைக்கிறேன். அல்லது அதற்கு சில வருடங்களுக்கு முன்பு. ஆனால் நூலாக இல்லாமல் ebookஆக படித்ததும் மட்டும் நன்றாக நினைவிருக்கிறது‌. அந்த வயதில் கடுமையான அதிர்ச்சியை அளித்த நூல். தன்னுடைய மாதவிடாய்க் குருதியை(நாவலில் சாண்டை என்றே எழுதப்பட்டிருக்கும்) தன்னைக் கொடுமைப்படுத்தும் குடும்பத்தினருக்குச் செய்யும் உருளைக்கிழங்கு பொறியலில் ஒரு பெண் கலந்துவிடுகிறாள். அதுவும் கண்டுபிடிக்கப்பட்டு மேலும் கொடுமையை அனுபவிக்கிறாள். அந்தச் சித்திரிப்பை மறக்க முடியாமல் ரொம்ப நாளாக வேதனைப்பட்டுக் கொண்டிருந்தது நினைவிருக்கிறது. அதன்பிறகு சில வருடங்கள் கழித்து எக்ஸிஸ்டென்ஷியலிஸமும் ஃபேன்சி பனியனும் என்ற சாருவின் முதல் நாவலை வாசித்தேன். இவற்றிற்கெல்லாம் முன்பே மனம் கொத்திப் பறவைத் தொடரை ஆனந்த விகடனில் வாசித்திருந்தேன். சாருவின் எழுத்துக்களாக ஒரு மாதத்துக்கு  முன்புவரை நான் வாசித்திருந்தது இவ்வள...

எல்லாச் சாலைகளும் தப்படிச்சான் மூலையை நோக்கி - சிவக்குமார் முத்தய்யாவின் குரவை நாவலை முன்வைத்து

Image
நேரடியான களத் தரவுகள் ஒரு நாவலின் வெற்றியில் எவ்வளவு தூரம் பங்கு வகிக்க முடியும் என்ற கேள்வியுடன் குரவை நாவலை அணுகுவது சரியாக இருக்கும். தமிழில் இதற்கு முன்பு நேரடியான கள ஆய்வுகள் அல்லது தரவுகளை அடிப்படையாகக் கொண்டு சில நாவல்கள் வெளியாகி இருக்கின்றன. ராஜம் கிருஷ்ணனின் பெரும்பாலான ஆக்கங்கள் இந்த வகைமையில் வரக்கூடியவை. ச.பாலமுருகனின் சோளகர் தொட்டி ,சதீஷ் வாசுதேவனின் கத்தலே, இரா.முத்துநாகுவின் சுளுந்தீ போன்ற ஆக்கங்கள் தரவுகளை மையமாகக் கொண்டு தமிழில் இதற்கு முன்பு வெளியான ஆக்கங்கள். இத்தகைய படைப்புகளால் சமூகத்தில் உடனடியாக ஒரு பேச்சினை உருவாக்க முடிகிறது என்பது உண்மைதான். விளிம்பு நிலை மக்களின் பாடுகள் பேசுபொருளாகும்போது அக்குரலுக்கு சமூகம் செவிசாய்க்க வேண்டிய ஒரு அறரீதியான கட்டாயத்தை இப்படைப்புகள் உருவாக்குகின்றன. அதில் தவறென்று கொள்ள ஏதுமில்லை. ஆனால் ஒரு படைப்பு சமகாலத்தின் அநீதியால் பாதிக்கப்பட்டவர்களின் குரல்களை மட்டும் பதிவு செய்தால் போதுமா? இத்தகைய படைப்புகளை அந்த அநீதி இழைக்கப்பட்ட மக்கள் என்னவாகப்‌ பார்க்கின்றனர்? என்ற வகையிலான கேள்விகளை எழுப்பிக் கொண்டு இப்படைப்புகளை அணுகுவது ஒரு ...