வாசகசாலை விருது காணொளி மற்றும் விருதுக் குறிப்பு





2017-ஆம் ஆண்டின் சிறந்த அறிமுக எழுத்தாளருக்கான வாசகசாலை விருது எனக்கு வழங்கப்பட்டது.


விருது குறிப்பு
வாசகசாலை தமிழ்_இலக்கிய_விருதுகள் -2017
சிறந்த அறிமுக எழுத்தாளர்:  சுரேஷ்_பிரதீப்
இந்த ஆண்டு வாசகசாலை விருதுகளின் சிறந்த அறிமுக எழுத்தாளர் பிரிவில் தனது "ஒளிர் நிழல்" நாவல் மற்றும் "நாயகிகள் நாயகர்கள்" சிறுகதைத் தொகுப்பிற்காக எழுத்தாளர் சுரேஷ் பிரதீப் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தமிழில் பொதுவாக நாவல் வடிவம் என்பது பல்வேறு சோதனை முறைகளுக்கு ஆட்பட்ட ஒன்றாகவே இருந்து வருகிறது. நீண்ட செறிவான வாசிப்பிற்குப் பின் புதிதாக எழுத வரும் ஒருவர் அத்தகைய முயற்சிகளை செய்து பார்ப்பது உண்மையில் மகிழ்ச்சியூட்டக் கூடிய ஒன்று.அவ்வகையில் சுரேஷ் தனது முதல் நாவலில் கதை சொல்லும் முறையில், மொழிப் பயன்பாட்டில் நம்மைக் கவர்கிறார்.
தொடர்பற்று தனித்து தெரிவது போல காணப்படும் அத்தியாயங்களை, கண்ணுக்குத் தெரியாத சூட்சுமக் கயிறால் கட்டி ஒரு பொதிக்குள் நிறுத்தும் இடத்தில் நாம் கண்டடையும் வெளிச்சம் ஒரு நல்ல படைப்பாளியை நம்முன் அடையாளம் காட்டுகிறது.அதே போன்று குடும்பம், உறவுகள் பற்றிய சுரேஷின் கணிப்புகள், தேற்றங்கள் அனைத்தும் இந்த அநித்ய வாழ்வின் மாறா பேருண்மைகளை அவர் தன் படைப்பில் கையாளும் விதம் கவனிக்கத் தக்க ஒன்றாகிறது.
அதபோலவே அவரது சிறுகதைத் தொகுப்பும். தொகுப்பை வாசித்து முடிக்கும் பொழுது சுரேஷ் இக்கதைகளின் வாயிலாக எதனைக் கண்டடைய முயல்கிறார் என்பதும், அவரது மனம் எதனை நோக்கிய பயணத்தில் தன்னை முன்னிறுத்தி இயங்குகிறது என்பதும் சுவாரசியமான கேள்விகள்..!
புனைவின் இருவேறு வடிவங்களில் எளிதாக இயங்க எத்தனிப்பவராக, அதற்கான பிரயாசையும், ஆர்வமும் கேள்விகளும் உள்ளவராக சுரேஷை நாம் உற்று நோக்கலாம்.

இப்படியான ஒரு இளம் எழுத்தாளரை அடையாளப்படுத்துவதில் வாசகசாலை மிகவும் பெருமை கொள்கிறது...

Comments

  1. வாழ்த்துக்கள் சுரேஷ்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

ஈசல் - சிறுகதை

சாரு நிவேதிதாவை வாசித்தல் 1

புக் பிரம்மா தென்னிந்திய இலக்கிய விழா - 2024