Posts

Showing posts from January, 2016

அழகி

அழகி அங்குதான். அன்றுதான். அக்கணந்தான். அருகாமையின் அர்த்தம்  புரிந்த கணமது. அறியாமையின்  இன்பம்  நுகர்ந்த நாளது. அவள் எனும் பதத்தை ஒவ்வொரு  நொடியும் ஒருமைக்கு வெளியே இழுக்கிறாள். அவளை அவள்கள் எனலாமா? இலக்கணம்  ஒப்ப மறுக்கலாம். ஆம். அவளொரு கூட்டுக் கனவு. அழகின் அத்தனை  அளவைகளுக்கும்  ஒரு அறைகூவல். முழுமைக்கு வெளியே நின்று கொண்டு முகம் பொத்தி பழிக்கிறாள். அவள் முகம் காணும் நேரம் ஒன்றிலும்  நிறையாமல் உள்ளேங்கும் ஒன்று ஒரு நொடி தன்னை மறக்கும். மறுநொடி ஒளிகொள்ளும். மறுநொடி அரசக் கனவு மீண்ட ஆண்டியென தன்னை சுருக்கி  தன்னுள் ஒடுங்கும். ஆனால் முன்பிருந்த ஒன்று நீங்கியிருக்கும். சோர்வு சூடிக் கொண்ட வாழ்வின் ஒருநாளில்  அனைத்தையும்  உதறியெழுந்து அருவியென வியர்வை  பெருக ஆற்றல்  கொண்டு கடுஞ்செயல் புரிந்து  கண்மூடி காற்றினை உள்ளிழுக்கையில் நிறையும் நெஞ்சத்தின்  உற்சாகம்  அவள் விழிநோக்க கிட்டிவிடும்.  குழப்பங்கள்  குடிகொள்ளும்  ஆழ்மனதை மென்சோக இசையொன்று மென்மையாய்  வருடுகையில் இன்னதென்று  அறியா...

மண்ணும் மழையும்

மண்ணும்  மழையும் 

நான்

நான் 

அம்மாவிடம் சில கேள்விகள்

அம்மாவிடம் சில கேள்விகள்  

இணை

இணை