Posts

Showing posts from June, 2017

ஸ்பைடர்மேனும் அமேசிங் ஸ்பைடர்மேனும்

Image
பத்து வயதில் ஐந்து கிலோமீட்டருக்கு அதிகமான தூரத்தை சைக்கிளில் கடப்பது எனக்கு எண்ண முடியாததொரு கிளர்ச்சியை அளித்திருந்தது. அப்போது எனக்கு சைக்கிள் ஓட்டத் தெரியது. அமர்ந்து செல்வதே கிளர வைத்திருந்தது. அதிலும் பயண நோக்கம் ஸ்பைடர் படம் பார்க்கச் செல்வது. வழக்கமாக பயணிக்கும் கொரடாச்சேரி-கமலாபுரம் சாலை வழியாக இல்லாமல் பாண்டவை ஆற்றின் மறுகரையில் உள்ள ஆலத்தாங்குடி வழியாக அத்திக்கடை சென்று அங்கிருந்து லெட்சுமாங்குடியில் இருக்கும் சாந்தி தியேட்டருக்கு சென்றோம். அண்ணனுடைய தோழர்கள் சிலரும் படத்துக்கு வந்திருந்தனர். பார்த்து முடித்து திரும்பி வருகையில் எப்படியெல்லாம் சிலந்தி மனிதனைப் போல் நடித்துப் பார்ப்பது என்ற கற்பனையிலேயே மூழ்கி இருந்தேன். அவ்வயதில் அத்தகைய பல கற்பனைகள் எனக்கிருந்தன. நண்பர்களுடன் டைம் மிஷினில் ஏறிப் பறப்பது சக்திமானை சந்திப்பது வளைந்த இரும்புக் கம்பியை துப்பாக்கியாக எடுத்துக் கொண்டு தீவிரவாதிகளை அழிக்க இந்திய ராணுவத்துக்கு துணை நிற்பது இப்படி பல. செம்மண் சாலையின் கப்பிக் கற்களில் எங்கள் சைக்கிள்கள் தடதடத்து வரும் போது "தம்பி எப்டி ஸ்பைடர் மேன் ஆவலாம்னு யோசிக்கிறானா?...

கண்ணாடிச் சில்லுகளும் கருங்குழல் நோட்டுகளும் - சிறுகதை

கண்ணாடிச் சில்லுகளும் கருங்குழல் நோட்டுகளும்