Posts

Showing posts from July, 2021

வெண்முரசு - சொல்வளர்காடு - துகிலுரிதலும் உடலுரிதலும்

Image
வெண்முரசு நாவல் வரிசையில் நீலம் இந்திரநீலம், இமைக்கணம் மூன்றும் மகாபாரதத்தின் மையக் கதைப்போக்கில் இருந்து வெகுவாக விலகியவை. சொல்வளர்காடு, கிராதம், மாமலர் ஆகிய நாவல்கள் பாண்டவர்களின் கான்வாழ்க்கையைப் பேசுகின்றன என்றாலும் இம்மூன்று நாவல்களையும் ஒரு வகையில் மகாபாரதத்தின் அரசியல் களத்தில் இருந்து பெரும்பாலும் விலகியவை என்று சொல்லலாம். சொல்வளர்காடு தருமனும் கிராதம் அர்ஜுனனும் மாமலர் பீமனும் தமக்கான மெய்மையை பன்னிரண்டு ஆண்டுகால கான்வாழ்க்கையில் பெறுவதைப் பேசுகின்றன. ஆனால் கிராதம், மாமலர் ஆகிய நாவல்களைவிட சொல்வளர்காடு சிக்கலானது. நாவலுடைய பேசுபொருள் சார்ந்த சிக்கல் என்பதைவிட வெண்முரசு வரிசையில் சொல்வளர்காடு வைக்கப்பட்டிருக்கும் இடம் சார்ந்து இந்நாவலில் ஒரு சிக்கல் உள்ளது. உண்மையில் அச்சிக்கல் ஒரு உப பிரதியாக நாவல் முழுவதுமே பேசப்படுகிறது. இக்கட்டுரையில் அச்சிக்கலின் வழியாக நாவலை அணுகிப் பார்க்கலாம் என எண்ணுகிறேன். வெண்முரசு நாவல்கள் ஒவ்வொன்றும் உருவ அளவில் தனி நாவலாகவே வாசிக்கத்தக்கவை. ஒவ்வொரு நாவலிலும் ஒரு திட்டமான கால அளவும் கதைப்போக்கும் உள்ளது. ஆகவே முந்தைய நாவலைப் பற்றிய ஒரு கோட்டுச்சித்...