Posts

Showing posts from October, 2018

வரையறுத்தல் - கடிதம்

அன்பின் சுரேஷ் இன்று தேர்வறைப் பணியென்பதால் மதியமே வீடு வந்துவிட்டேன். எதிர்பார்த்திருந்தபடியே காலச்சுவடு காத்திருப்பதை தபால்பெட்டியின் இடைவெளிக்குள் காண முடிந்தது. உடன் உறையைப்பிரித்து  ’’வரையறுத்தல்’’ வாசித்தேன். எதிர்பாரா வேலையொன்றினால் இடையில்வாசிப்பு அறுந்துவிட்டதால், மீள முதலிலிருந்து வாசித்தேன். முடிந்ததும் ஒரு இடத்தில் எனக்கு சரியாகப்புரியாதது போல குழப்பமாக இருந்ததால் மீண்டும் அப்பகுதியை வாசித்தேன். // மீட்டிங் முடிஞ்சு எப்போ புறப்படுவீங்களாம் என்று உம்புள்ளகேட்கிறான்// இதில் எனக்கு சக்தீஸ்வரி, மாலதி- பெயர் மற்றும் உறவுக் குழப்பம் இன்னுமே இருக்கு. கதைஅருமை. அன்று இன்று என இருகாலகட்டங்களை இணைக்கிறீர்கள். அன்று எண்ணெய் காணா பரட்டைத்தலையுடனிருந்த, சாதீய வரையறைகளால் விளிம்புக்கு தள்ளபட்ட குடும்பத்தைச்சேர்ந்த மாலதி இன்று மஞ்சள் நிறமும் செவ்வுதடுகளுமாய் அழகியாய் நீலப்புடவையில்! பண்பாட்டு மானுடவியல் கருத்தரங்கில் உரையாற்றும் பேராசிரியை தனசேகர் குடியானவப்பெண்ணை இழுத்துக்கொண்டு ஓடிப்போன நிகழ்வையும் அதன்பொருட்டு எரிக்கப்படவிருந்த தாழ்த்தப்பட்டவர்களின் வீடுகளையும் அவ்வீடுகளிலொன்ற...

ஒளிர்நிழல் கடிதம்

இது ஒரு எளிய வாசிப்பில் இருந்து எழும் விவரிப்பு.. ஒளிர்நிழல் என்ற பெயரை ஜெயமோகன் இணையதளத்தில் அறிந்திருந்தேன். சிரத்தை எடுத்து அது குறித்து தெரிந்து கொள்ளவில்லை. ...