Posts

Showing posts from 2020

நூல் ஒன்று - முதற்கனல்

 நூல் ஒன்று - முதற்கனல் என் கொள்ளுப்பாட்டியின் வழியாக நம் மரபின்  சில தொன்மங்களையாவது கேட்டு வளரும்  பேறு பெற்றவன் நான். நுட்பமான  கதை சொல்லலும் பல திசைகளில் விரிந்து எழும் கதை நகர்வும் கொண்ட வெண்முரசின்  முதல் நாவலான  முதற்கனல் முதல் முறை வாசிக்கும்  போது  எனக்குள் பெருந்திகைப்பை ஏற்படுத்தாமல் உள்ளே அனுமதித்ததற்கு என்னுடைய  வாசிப்புத் திறனை மெச்சிக் கொள்ள முடியாது. மானசாதேவி  என்ற நாகர் குலத்தலைவி தன் ஏழு வயது மகன் ஆஸ்திகனுக்கு சொல்லும்  கதைகள் என்னை ஏற்று உள்ளிழுத்துக்  கொண்டதற்கு சிறு வயதில்  கொள்ளுப்பாட்டியின் இழுவையும் ஏளனமும்  நிறைந்த குரலில் கேட்ட தொன்மங்களே காரணம். மானசாதேவிக்கும் ஜரத்காரு முனிவருக்கும் பிறந்த  ஏழு வயதான  ஆஸ்திகன்  குருஷேத்திர போர் முடிந்து இரு தலைமுறைகள்  கடந்த பின் அஸ்தினபுரி அரசனான ஜனமேஜயன் தீமைகளை அழிக்க எண்ணி நிகழ்த்தும்  சர்ப்பசத்ர வேள்வியை தடை செய்யும்  பொருட்டு எழுகிறான். காமமாகவும் அகங்காரமாகவும் மண்ணில்  பெருகும் நாகங்கள் அழிக்கப்படுவதை வைதிகனாகவும்...

நூல் இரண்டு - மழைப்பாடல்

  கங்கைக்ரையில் அமைந்த தொன்மையான  ஷத்ரிய குலங்களை கடந்து பார்ப்பவராக அறிமுகமாகிறார் பீஷ்மர். பழம்பெருமைகளால் குலப்பூசல்களில் ஈடுபட்டிருக்கும் அதிகாரம்  மிக்க  ஐம்பத்தாறு ஷத்ரிய நாடுகளை முற்றாக  தவிர்த்து விட்டு பாரதவர்ஷத்தின் எல்லை நிலங்களில்  இருந்து அரசுகள் உருவாகி வருகின்றன. மகாபாரதத்தை மிக மிக எளிமைப்படுத்தப்பட்ட குடும்பப் பகையாகவும் அதன் மீது போடப்பட்ட தொன்மங்களின் வழியாக  ஒரு மாயாஜால  கதையாகவும் நம்மில்  பலர்  அறிந்திருப்போம். ஆனால்  அக்கால  இந்தியா வரலாற்றின்  ஒரு குறுக்கு வெட்டுத் தோற்றம் மகாபாரதத்தில்  உள்ளது. மழைப்பாடல் அவ்வரலாற்றை தொட்டுச் செல்லும்  அதே நேரத்தில்  பெரும் ஆளுமைகளையும் அவர்களின்  முழு விரிவோடு அறிமுகம்  செய்கிறது.  விழியற்றவனுக்குரிய பதற்றத்துடன்  அறிமுகமாகும்  திருதராஷ்டிரன் பீஷ்மரை மல்யுத்தத்திற்கு அழைத்து அவரிடம்  அடைக்கலம்  கொள்கிறான். விதுரன்  அரசு சூழ்கையில் பீஷ்மருக்கு இணையாக  ஏறி வரும்  இடத்திலிருந்தே மிக நுண்மையான  வார்...

நூல் மூன்று - வண்ணக்கடல்

நம் ஒவ்வொருவரின் முடிவுகளின் மீதும் வரலாறு தனக்கான ஒரு முடிவினை கொண்டிருக்கும் போலும். ஆனால் வரலாறு என்பதென்ன? ஒரு சொல். அதன் மீது ஏற்றப்படும் அர்த்தங்கள் மாறிக் கொண்டே இருக்கின்றன. சிலவற்றை மறக்கிறோம். சிலவற்றை மறு கண்டுபிடிப்பு செய்கிறோம். அக்கணத்தில் வாழ்ந்து விடும் உரம் பெற்றவர்களால் சொல்லப்படும் வரலாறே வண்ணக்கடல். சூதர்களின் ஒளிமிக்க சொற்கள் வழியாக உயிர்பெற்று வருகின்றது ஒரு இந்திய சித்திரம். ஆரியவர்த்தம் என்றழைக்கப்பட்ட கங்கைக் கரையமைந்த நிலப்பகுதியின் அரசியல் களத்தினை இதற்கு முந்தைய நூலான மழைப்பாடல் அறிமுகம் செய்திருக்கும். அதிகாரத்திற்கே உரிய இறுக்கமும் தெளிவும் கொண்ட படைப்பது. அக்களம் தெளிவாக வரையப்பட்ட பின் களத்தில் நிற்கப் போகிறவர்களின் இளம் பருவத்தை விவரிக்கிறது வண்ணக்கடல். ஏழ்பனை நாட்டு மருதூர் சாத்தன் பெரும்பாணன் மகன் இளநாகன் மூதூர் மதுரையிலிருந்து அஸ்தினபுரி நோக்கி பயணிக்கிறான். இளநாகனாக நின்று இப்படைப்பை அணுகுவதே உகந்தது என்பது என் எண்ணம். முதல் முறை படித்தபோது பல இடங்களை கடக்க முடியாமல் இணைத்துக் கொள்ள முடியாமல் அவதிப்பட்டதற்கு இந்த முடிவினை எடுக்காததே காரணம் என நினைக்...

பிம்பச்சிறை - சில குறிப்புகள்

Image
எம் எஸ் எஸ் பாண்டியனின் பிம்பச்சிறை என்கிற நூலை வாசித்தேன். எம் ஜி ஆர் இறந்த சில வருடங்களில் எழுதப்பட்ட இந்த நூல் எம் ஜி ஆர் என்ற 'பிம்பம்' எப்படி மக்கள் மனதை வெற்றிக் கொண்டு எம் ஜி ராமச்சந்திரனை பதினோரு ஆண்டுகள் வெல்ல முடியாதவராக ஆட்சியில் அமர்த்தியிருந்தது என்பதை புரிந்து கொள்ள முயல்கிறது. எம் ஜி ராமச்சந்திரன் இறந்த சில வருடங்களில் எழுதப்பட்டதாலோ என்னவோ இந்த நூலில் சில உற்சாகமான முன்முடிவுகள் தென்படுகின்றன. முப்பத்தோரு அத்தியாயங்கள் கொண்ட இந்த நூலின் தொடக்க அத்தியாயங்கள் சில எம் ஜி ராமச்சந்திரனின் பதினோரு ஆண்டுகால ஆட்சி ஏன் தமிழகத்தின் 'இருண்ட காலம்' என்பதை சில தரவுகளின் அடிப்படையில் சொல்கின்றன. அந்த இருண்ட காலம் அடித்தட்டு மக்களுக்கு தீமை விளைவித்திருக்கிறது. ஆனாலும் அடித்தட்டு மக்கள் ஏன் எம்ஜிஆருக்கு அவர் இறக்கும் வரை - இறந்த பிறகும் கூட - ஏன் விசுவாசமாக இருந்தனர் என்பதை விளக்க முயல்கிறது. எம்ஜிஆர் என்ற பிம்பம் மக்கள் மனதில் எப்படி வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது என்பதை விளக்குவதில் எடுத்துக்கொண்ட சிரத்தையை ஆசிரியர் எம்ஜிஆர் ஆட்சியின் பாதகங்களை(?) சுட்டுவதில் செல...

வெண்முரசு நாவல் வரிசை - அறிமுகக் குறிப்புகள்

Image
எழுத்தாளர் ஜெயமோகன் மகாபாரதத்தை முழுமையாக மறு ஆக்கம் செய்து எழுதிய நாவல் வெண்முரசு. இருபத்தாறு தனித்தனி நாவல்களாக எழுதப்பட்டுள்ள வெண்முரசை இணைத்து ஒரே நாவலாகவும் வாசிக்க இயலும். ஜனவரி 1, 2014 முதல் வெளிவரத்தொடங்கிய வெண்முரசு ஜூலை 16, 2020ல் முடிந்திருக்கிறது. இந்த நாவல் வரிசையை www.jeyamohan.in மற்றும் www.venmurasu.in ஆகிய தளங்களில் வாசிக்கலாம்.  அனைத்து நாவல்களும் கிண்டிலும் கிடைக்கின்றன. (வெண்முரசு நாவல்களை கிண்டிலில் வாங்குவதற்கான சுட்டி  - https://amzn.in/dFTj7xN/) வெண்முரசு நாவல்களை வாசிக்க விரும்பும் வாசகர்களுக்காக ஒவ்வொரு நாவலிலும் நிகழும் மைய நிகழ்ச்சிகள் குறிப்புகளாக கீழே தரப்பட்டுள்ளன. ஒவ்வொரு தனிநாவலும் தன்னளவில் பல்வேறு வடிவப்புதுமைகளைக் கொண்டிருந்தாலும் வெண்முரசை ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது அதிலொரு நேர்க்கோட்டுத் தன்மை இருப்பதைக் காண முடிகிறது. நூல் ஒன்று - முதற்கனல்  அஸ்தினபுரியின் அரசனாக பொறுப்பேற்கவிருக்கும் விசித்திரவீரியனுக்காக காசிநாட்டு இளவரசிகளான அம்பை, அம்பிகை, அம்பாலிகை மூவரையும் பீஷ்மர் சிறையெடுத்து வருகிறார். விசித்திரவீரியனின் இறப்பும், பீஷ்மர...

வெண்முரசை என்ன செய்வது?

Image
சென்ற வருட இறுதியில் நிகழ்ந்த 'அயோத்திதாசர் பார்ப்பனர் முதல் பறையர் வரை' நூல் வெளியீட்டு விழாவில் பேராசிரியர் டி.தருமராஜ் 'நாம் வெண்முரசை எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறோம்?' என்றொரு கேள்வியை முன்வைத்தார். சங்க இலக்கியத்தை, அயோத்திதாசரை என நம்மிடம் புதிதாக 'கண்டெடுக்கப்பட்டு' கொடுக்கப்படும் எதையுமே நமக்கு - அதாவது தமிழர்களுக்கு - முறையாக எதிர்கொள்ளத் தெரிந்திருக்கவில்லை என்பதன் தொடர்ச்சியாக மேற்சொன்ன கேள்வியை முன்வைத்தார். வெண்முரசின் இறுதி நாவல் எழுதப்பட்டுக் கொண்டிருக்கிறது. அதை முன்னிட்டு இன்று காலையும் மாலையுமாக ஜெயமோகன் வெண்முரசு வாசகர்களுடனான இணையவழி கலந்துரையாடலில் ஈடுபடுகிறார். இதை ஒட்டி தமிழ் அறிவுச்சூழலில் ஒரு மெல்லிய சலனம் ஏற்பட்டிருக்கிறது. இந்த சலனத்தை கவனிக்கும் போது அதனுள் இந்த நாவல் வரத்தொடங்கிய ஜனவரி 1, 2014 முதல் நாம் அதை எவ்வளவு தோல்விகரமாக எதிர்கொண்டிருக்கிறோம் என்ற காரணத்தைக் காண முடிகிறது. முதலில் வெண்முரசு நாவல் வரிசைக்கு நவீன இலக்கியத்தில் என்ன இடம் கொடுப்பது என்ற குழப்பமும் பதற்றமும் ஏற்படுகிறது. இதுவரை தமிழில் வெளியான பல நல்ல நாவல்களை இந்த ந...

பரிசுப்பொருள் - சிறுகதை

பாண்டவையாற்றை குறுக்காகக் கடந்த கமலாபுரம் பாலத்தில் வெயில் விரிந்து கிடந்தது . மோனிகா பயணப்பையுடன் கமலாபுரத்தில்  இறங்கிய போது சாலையில் பரவலாக தேங்கியிருந்த மழைநீர் காலைச் சூரியன் பட்டு அவள் கண்களை கூசச் செய்தது. புறங்கையை கண்களுக்கு நேரே நீட்டிக் கொண்டு நின்று பேருந்தில் வந்ததால் ஏற்பட்ட உடற்சமநிலையின்மையை சரிபடுத்த முயன்றாள்.  கை மூட்டுகளிலும் விரல் பொருதுகளிலும் உடலிலும் மெல்லிய உலைச்சல் எடுக்க நின்றபடியே சோம்பல் முறித்தாள்.  ரொம்ப சாயக்கூடாது என்பது நினைவிற்கு வர அப்படியே நின்றுவிட்டாள். உடலில் ஒரு சமநிலையின்மை சில கணங்கள் நீடித்தது. இருந்தாலும் ஒரு  விடுதலையை உணர முடிந்தது. வெறுமையுடன் புன்னகைத்துக் கொண்டாள். அவளெதிரே வந்து நின்ற சன்ஸ்கிரீன் ஒட்டப்பட்ட ஃபார்சூனர் காரில் முகத்தைப் பார்த்தாள். சிகையை பின்னுக்குத் தள்ளி விலகியிருந்த சிறிய ஸ்டிக்கர் பொட்டினை நெற்றி நடுவே அமைத்தபோது முகம் பொலிவுற்றது. அவள் முகம் திருப்தியைக்காட்ட அதற்கெனவே நின்றிருந்தது போல அந்த ஃபார்ச்சூனர் கடந்து சென்றது. ஓரக்கண் சற்று தூரத்தில் பழக்கப்பட்ட உடலசைவுகளை காட்டியது. சிவக்குமார் தான். ச...

காத்திருத்தல் - குறுங்கதை

நான் ரொம்ப நேரமாக காத்துக் கொண்டிருக்கிறேன். இன்னும் அவர் வரவில்லை. நான் காத்துக் கொண்டிருந்த அறையில் ஒரேயொரு ஜன்னல் திறப்பு இருந்தது. அத்திறப்பில் இருந்து எதிரே இருக்கும் ஆளில்லாத உயரமான கட்டிடங்களைப் பார்க்க முடிந்தது. நான் தரைத்தளத்தில் இல்லை  என்பதை அடிக்கடி ஞாபகப்படுத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது. அந்த அறை இருப்பது ஒரு பெரிய அடுக்ககத்தில் என்பது தெரிகிறது. எதிரே உள்ள ஜன்னல் வழியே தெரியும் கட்டிடம் போன்ற அமைதி நான் அமர்ந்திருக்கும் அறை இருக்கும் அடுக்ககத்தில் இல்லை. அறைக்கு வெளியே விதவிதமான சத்தங்கள் கேட்கின்றன. கதவை எழுந்து சென்று திறக்கலாம்தான். ஆனால் திறக்கப் பிடிக்கவில்லை அலுப்பாக இருக்கிறது. மேலும் நான் காத்திருக்கிறேன். காத்திருத்தல் என்ற வேலையில் ஈடுபட்டிருக்கும் போது ஏன் இன்னொரு தேவையில்லாத வேலையில் தலையை நுழைக்க வேண்டும்? இப்படி தலையை நுழைப்பது சரி கிடையாது. ஏனெனில் அது நம்மை இன்னொரு செயலுக்கு இட்டுச் செல்லும். மனதை நிலைக்க விடாமலடிக்கும். இப்படி அமர்ந்து கொண்டு இந்த அறையையும் ஆளரவம் அற்ற எதிர் கட்டிடங்களையும் பார்த்துக் கொண்டிருப்பதால் என்ன குறைந்துவிடப் போகிறது? இந்த...

பூரணி சிறுகதை குறித்து மணிகண்டன்

பூரணி சிறுகதை அன்புள்ள சுரேஷ்  பூரணி மோகமுள் நாவலை படித்திருப்பார் என்று எழுதி உங்களை வெறுப்பேற்ற ஆசையாக இருக்கிறது. நல்ல சீரான நடையில் எந்த வித குழப்புமின்றி கதை முடிகிறது. மிகவும் ரசித்து படித்தேன். ஒளிர் நிழல் குறித்து முன்னர் உங்களுக்கு கடிதம் எழுதியிருக்கிறேன்.பூரணி கதையால் பாதிக்கப்பட்டேன் என்று கூற இயலாது, எனினும் நீங்கள் ஆளுமை சிக்கல் குறித்த பல நுட்பமான இடங்களை இந்தக் கதையில் பல இடங்களில் உராய்ந்து சென்றுள்ளீர்கள். நல்லது.  நட்பு இருப்பதிலேயே  எளிதானது நமது தேர்வின் வழி நாம் தேர்ந்தெடுக்கும் நமது நண்பர்களுக்கும் நமக்கும் உள்ள உறவை புரிந்து கொள்வது. நம் தேர்வின் வழி வருவதால் நமக்கு பிடித்தமானது அதே நேரத்தில் நண்பர்களின் மாற்று பார்வை நாம் ஆளுமையில் உராய்கையில் நாம் என்ன மாதிரி உணர்கிறோம், நட்பை எவ்வாறு தொடர்கிறோம் என்பதே நாம் ஆளுமையில் ஒரு பகுதியாகிறது. கதையில் விக்னேஷின் நண்பன் கசப்பான ஒன்றை கூறினாலும் அது மரபார்ந்த ஒன்றுக்கு அருகில் இருக்கிறது. மரபு  நாம் காலங்களின் அடுத்த சிக்கல் நாமே விரும்பி அணிந்து கொள்ளும் முற்போக்கு பாவனை , சமூக ஊடகங்கள் வழி இந்த பாவன...

ஸ்ரீராம ஜெயம்

Image
தி.ஜானகிராமனின் சிறுகதைகள்(முழுத்தொகுப்பு) வாசித்து வருகிறேன். சரளமாக வாசித்துச் செல்லக்கூடிய கதைகள். நவீனத்துவத்தின் இறுக்கம் கவிந்துவிடாத நேரடியான கூறல்  கொண்ட கதைகள். பெரும்பாலான கதைகளில் பசி முக்கிய பங்கு வகிக்கிறது. பாயாசம்,பரதேசி வந்தான்,கோயம்புத்தூர் பவபூதி,பஞ்சத்து ஆண்டி,குளிர், சிலிர்ப்பு என பல கதைகளில் வறுமையின் கையறு நிலை அப்பட்டமாக வெளிப்படுகிறது. மற்றொரு வகையான கதைகளில் காமத்தின் அலைகழிப்புகள் பேசு பொருளாகி இருக்கின்றன. பெரும்பாலும் வாலிப்பான உடல் கொண்ட இளம் விதவைகள் மீதான பச்சாதாபம் இக்கதைகளில் வெளிப்படுகிறது.சண்பகப்பூ, பசி ஆறிற்று, தூரப்பிரயாணம்,தவம்,ஆரத்தி போன்றவை இவ்வகை கதைகள். ஆனால் தி.ஜாவின் ஆகிருதி முதல் வகைக் கதைகளிலேயே பூரணமாக வெளிப்படுவதாகத் தோன்றுகிறது.  எளியோரின் பசி கண்டு துயர் கண்டு இரங்கும் அவர்களின் கையறு நிலையை கனிவுடன் எடுத்துச் சொல்லும் முதல் வகைக் கதைகளே அவர் எழுதியவற்றில் முக்கியமானவை என்று நினைக்கிறேன். பெரும்பாலும் கதைகள் நேரடியாகவே சொல்லப்பட்டிருந்தாலும் ஸ்ரீராமஜெயம் என்ற கதை அதன் மௌனத்தால் தொடர்புறுத்தும் தன்மையால் அபாரமான கலைப்பெறுமானம் ப...

:) :( - குறுங்கதை

Image
12 MAY 2020 (2.02AM) Dei thoonkittiya illa di :) Mani rendaguthu. Innum thoongama enna da panra En rendu manikku thoonkidanuma? Nee ivlo neram enna panriyam? Enakku hubby irukkan athanala thoongala :( Enna pannineenga Ellam night la panrathu than (அவள் போர்வைக்கு வெளியே தெரிந்த தன் கால்களையும் தன் கணவன் கால்களையும் படம் எடுத்து அனுப்பினாள்) Nude a irukkiya Ama ethukku kekkura? Chumma imagine panna than. Eppavum matter pannittu nude a than thoonguviya? Dei uthai vanguva? Chumma sollu di Kobama? Athellam illa Appo sollu Avan thoongiduvan. Naan konja neram yosichuttu paduththuruppen. Appuram nighty pottu thoonguven. Oh Enna "oh" Sari kobapadatha. Dei inime ithu paththi yellam kekkatha. Ketta enna? Kekkathanna viden En kekka kudathu nu sollu Ithu enga personal Oho Enna da oho Appo avan tarture panrathu mattum enkitta sonna *torture Athukku nu avan matter panrathaiyum unkitta sollanum Enna da pesa matra? Nee...

ஒளிர்நிழல் குறித்து அ.க.அரவிந்தன்

Image
அன்புள்ள சுரேஷ் பிரதீப் அவர்களுக்கு, நாவல் வாசித்த பின்னர் 'ஒளிர்நிழல்' பற்றிய பிறர் கருத்துக்களை பார்த்தேன் .அதில் ரஞ்சனி பாசு அவர்கள் எழுதிய கருத்துக்களும் என் அவதானிப்புகளும் சற்றே ஒத்திருந்தது.அதனால் அதில் சொல்லப்பட்டதை தவிர்த்து வேறு சில கருத்துகளை எழுத விழைகிறேன். புயலிலே ஒரு தோணியில் ஆவன்னா என்ற ஒரு அத்தியாயமுண்டு.அதில் அந்த கதாபாத்திரம் ஒரு பெருங்கதையை சொல்லும்.எழுச்சி பெற்று வீழ்ச்சி அடைந்த ஒரு கதை அது.அதுதான் நாவலின் அடிநாதமென எனக்கு தோன்றும்.அதுதான் நாவலிலே நீண்ட அத்தியாயம் என்றும் நினைக்கிறேன். ஒளிர்நிழல் படித்தபோது அந்த நினைவு எட்டிப்பார்த்தது.ஆனால் இங்கு வீழ்ச்சியை மட்டும் அல்லது வீழ்ச்சிக்கு பின்னர் என்று நான் வரையறுத்துக்கொள்கிறேன். காத்தவராயன்,ராஜகோபால தேவர் சித்திரத்தை வைத்து இதை செய்கிறேன். எஞ்சும் சொற்கள் முன்னுரை என்று நினைக்கிறேன். நீங்கள் கதை சொல்லும் யுத்திக்கு முக்கியத்துவம் தருபவன் அல்ல என்று சொன்னீர்கள்.நாவலை படிக்கும் எவருமே அதை ஆமோதிக்கமாட்டார்கள் என்று நினைக்கின்றேன். ஒரு பெரிய வேலியமைத்து அதனுள்ளே நீங்கள்  மாட்டி, பின்னர் வெகுல...