Posts

Showing posts from January, 2018

பாகீரதியின் மதியமும் புனைவின் சாத்தியங்களும்

Image
நாவல் என்ற வடிவத்தின் மீதான தொடர் வாசிப்பு தேவைப்படும் ஒரு சூழலில் வாழ்ந்து வருகிறோம் என்ற எண்ணம் நண்பர்களுடன் நாவல் குறித்து பேச நேரும்போது தோன்றும். நாவல் வடிவம் தொடர்கதையில் இருந்து ஏன் வேறுபடுகிறது என்பதை தொடர்ச்சியாக சொல்ல வேண்டியிருக்கிறது. எழுத்து புதுமையான வாழ்க்கைச் சூழலுக்கு ஏற்றவாறு பரிணாம வளர்ச்சி அடைந்தபோதே சிறுகதை நாவல் குறுநாவல் குறுங்கதை புதுக்கவிதை என பல்வேறு நவீன இலக்கிய வடிவங்கள் உருவாகி வருகின்றன. இந்த வடிவங்களில் நாவலுக்கான சாத்தியம் மட்டும் விரிவானது. ஒரு எல்லைக்கு மேல் வரையறுத்துச் சொல்ல முடியாதது. தமிழில் வெளிவந்திருக்கும் நாவல்களை திரும்பிப் பார்க்கும் போது நாவல் என்ற வடிவத்தின் உருமாற்றத்தை தெளிவாகக் காண முடியும். நாவல் என்ற பிரக்ஞையுடன் எழுதப்பட்ட படைப்புகள் (பொய்த்தேவு, புயலிலே ஒரு தோணி, ஒரு புளிய மரத்தின் கதை), இறுக்கமான கட்டமைப்பைக் கொண்ட நவீனத்துவ நாவல்கள்(கரைந்த நிழல்கள், ஜே.ஜே.சில குறிப்புகள்), இயல்புவாதப் படைப்புகள்(பிறகு),இறுக்கம் தளர்ந்த விரிந்த கதைக்களத்தை நோக்கி பயணிக்க எத்தனித்த பின் நவீனத்துவ படைப்புகள் (விஷ்ணுபுரம்), யதார்த்த தளத்தை ம...