எஞ்சும் சொற்கள் - ஒரு வாசிப்பு
சமகால இளம் எழுத்தாளர்களின் கதைகளை தேடிப்பிடித்து படித்து வியப்பதிற்குண்டான ஆர்வத்திற்கேற்ற சரியானத் தீனிப்போட்டிருக்கிறதா இச்சிறுகதை தொகுப்பு என்றால் ஒருசில வகைகளில் மனமுவந்து ஆம் எனலாம். வளரும் எழுத்தாளரான சுரேஷ் பிரதீப்பின் எஞ்சும் சொற்கள் தொகுப்பில் இடம்பெற்றுள்ள பன்னிரண்டு கதைகளின் தாக்கத்தின் துல்லியத்தை தெளிவுப்படுத்தக்கூடிய முயற்சியின் ஒரு சிறு துகள் தான் இக்கட்டுரையே தவிர மொத்தமாகவே அக்கதைகளை தராசில் நிறுத்தி பார்த்து தரம் பிரித்துப் பார்க்கும் முயற்சியால் விளைந்தது அல்ல. முதல் கதையான ‘வீதிகளி'ல் வரக்கூடிய பிரவீணாவினூடாக ஒரு சிறிய கிராமத்தின் தெருக்களுக்கு அழைத்துச் செல்கிறது கதைக்களம். வருடங்கள் பல உருண்டோடிய பின் சந்திக்கும் தோழிகளின் உணர்வு ரீதியான கொந்தளிப்புகளையும் குறுகுறுப்பையும் வர்ணிக்கும் எழுத்தாளரின் சிரத்தை மிளிரும் இடமென்றால் அது தோழிகளில் ஒருத்தி மணமாகி கைக்குழந்தையுடன் இருப்பதையும் அவளை யதேர்ச்சயாக காணும் இன்னொருத்தியின் மனஅலைகளில் விரியும் வியப்புக்கலந்த நுண்ணுர்வுகளின் வெளிப்பாடுகளை விவரித்திருக்கிற விதத்தைச் சொல்லலாம். அதிலும் அவர்களின் உரையாட...