Posts

Showing posts from December, 2018

முன்னுரை - எஞ்சும் சொற்கள்

Image
கிழக்குப் பதிப்பக வெளியீடாக வரவிருக்கும் என் இரண்டாவது சிறுகதை தொகுப்புக்கான முன்னுரை கரைசேர்ந்தவை பியோதர் தஸ்தாவெய்ஸ்கியின் குற்றமும் தண்டனையும் நாவல் குறித்து செப்டம்பர் 2017ல் என் தளத்தில் ஒரு கட்டுரை எழுதினேன். அக்கட்டுரை வெளியான அன்றே எழுத்தாளர் கே.என்.செந்தில் அலைபேசியில் தொடர்பு கொண்டார். இரண்டாயிரத்துக்குப் பிறகு எழுத வந்த எழுத்தாளர்களில் மிக முக்கியமானவர் என நான் எண்ணும் ஒருவர் அழைத்துப் பேசுவது மிகுந்த மனநிறைவை கொடுத்தது. அதோடு இலக்கியம் குறித்த கறாரான மதிப்பீடுகள் கொண்ட ஒருவரிடம் பேசுவதால் ஏற்படும் மெல்லிய பதற்றமும் அவ்வுரையாடலின் போது இருந்தது. கபாடபுரம் இதழுக்காக ஒரு சிறுகதை அல்லது கட்டுரை எழுத வேண்டும் என கே.என்.செந்தில் கேட்டார். என் அலுவலகத்தில் தோழி ஒருவருக்கு நிகழ்ந்த ஒரு அனுபவம் மனதின் ஒரு மூலையில் அப்போது கதை வடிவம் கொள்ளத் தொடங்கியிருந்தது. அந்த நம்பிக்கையில் சில வாரங்களில் கதையை எழுதி அனுப்புவதாக ஒப்புக் கொண்டேன். அதன்பிறகே ஒருவருடைய தனிப்பட்ட அனுபவத்தை அதுவரை கதையாக்கியதில்லை என்பதும் நான் மதிக்கும் ஒரு எழுத்தாளர் என்னிடம் இப்படியொரு கோரிக்கையை வைத்ததில்ல...

ஈர்ப்பு - பகுதி இரண்டு

6 வெகு நேரமாக அடக்கி வைத்திருந்த இருமல் வலுவாகத் தாக்கியது. கணினியின் முன் அமர்ந்திருந்தவன் கீபோர்டில் தலை வைத்து சரிந்து விட்டான். அறை எந்த ஒழுங்கும் இல்லாமல் ...