Posts

Showing posts from April, 2016

பெரியம்மா வீடு

வாய் திறப்பதற்கு  முன் கண் திறந்து விட வேண்டும் என்ற எண்ணம்  வாய்க்கு முதலில் வந்துவிட்டதால்  மூடிய  இமைகளில் விழியுருண்டைகள் அசைந்து கொண்டிருக்க குணா லேசாக வாயைத் திறந்து விட்டான். நெடியுடைய எச்சில்  இடக்கை மணிக்கட்டில் பட்டதும்  துடித்துப்  போய்  எழுந்து கொண்டான். நல்லவேளை  தலையணையில் எச்சில் படவில்லை  என்ற நிம்மதி. பின் பெரியம்மா வீட்டில்  தானே இருக்கிறோம்  என்ற அலட்சியம். மணி ஆறடித்தது. வழக்கத்தை  விட  வெளிச்சம் குறைவு என எண்ணிக்  கொண்டான். டிராயரை முழங்கால்  வரை கழற்றிக்  கொண்டு ஆற்றரெதிரே ஒன்னுக்கடித்தான். மார்பு வரை பாவாடையை  உயர்த்திக்  கட்டி ஆற்றில் குளித்துக்  கொண்டிருந்த பெண்ணொருத்தி பக்கத்தில்  நீந்தியவளிடம் “இங்கேருடி கெலுத்தி மீன சொறுகி வெச்சிருக்கான்” என்றாள். “போடி” என தலையை நொடித்துக்  கொண்டு டிராயரை உயர்த்திக் கொண்டான்  குணா. ஷாலை இடுப்பில்  இறுக்கி முடிந்தவாறு சுகன்யா துவைத்த  துணிகளோடு எதிர வந்தபோது  குணா இடதுகையால் பிரஷ்ஷை வாய்...