அரைக்கிணறு
15.01.2023 பதிவேற்றிய நிழலின் தனிமை நாவல் குறித்த அறிமுகக் காணொளியுடன் 'முப்பது நாட்கள் முப்பது நூல்கள்' வரிசையில் பதினைந்து காணொளிகள் நிறைவடைந்திருக்கின்றன. நேரம் கிடைக்கும் போது இரண்டு மூன்று காணொளிகளாக பதிவு செய்து வைக்கும்படி நண்பர்கள் பலர் கூறியிருந்தனர். நேரம் கிடைக்கவில்லை என்பதுதானே முக்கியமான பிரச்சினை! Tamil literary talks சேனல் தொடங்கியபோது நூல் அறிமுகங்கள் செய்ய வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இல்லை. ஆனால் இந்தக் காணொளிகளால் உந்தப்பட்டு எனக்குத் தெரிந்தே பன்னிரண்டு நண்பர்கள் நான் அறிமுகம் செய்திருக்கும் நூல்களை வாசிக்கத் தொடங்கியுள்ளனர். கருணாகரத் தொண்டைமான்,ஆகோள் பூசலும் பெருங்கற்கால நாகரிமும் மாதிரியான ஆய்வு நூல்கள் குறித்தெல்லாம் விசாரிக்கின்றனர். உள்ளபடியே இந்த நூல் அறிமுகங்கள் மகிழ்ச்சி அளிக்கின்றன. ஒருசில நூல்கள் தவிர்த்து மற்ற அனைத்தும் முன்பு எப்போதோ வாசித்து நினைவிலிருந்து மீள்கிற நூல்களாக இருக்கின்றன. இருநூறு பக்கங்களுக்கு குறைவான நூல்கள் என முன்னரே அறிவித்துவிட்டேன். ஒரேயொரு பிரச்சினை இருநூறு பக்கங்களுக்கு குறைவான நூல்களை நான் குறைவாகவே வாசித்திருக்கிறேன் என...