Posts

Showing posts from August, 2019

என் படைப்புகள் குறித்த கருத்தரங்கு

Image
கவிஞர் சமயவேல் என்னுடைய நூல்கள் குறித்து ஒரு கூட்டம் ஏற்பாடு செய்யலாமா என்று கேட்டபோது எனக்குத் திகைப்பாக இருந்தது. மூத்த எழுத்தாளர் ஒருவர் எழுத வந்து மூன்று ஆண்டுகள் கூட ஆகாத ஒரு இளம் எழுத்தாளனின் நூல்களுக்கு கூட்டம் நடத்த முன்வருவது (இந்த நிகழ்வுக்கு முன்புவரை நாங்கள் சந்தித்ததும் இல்லை) தமிழ்ச்சூழலில் அரிதாகவே நடக்கும் நிகழ்வாகவே எனக்குப்படுகிறது. நிகழ்வுக்கான அறிவிப்பு வெளியான சமயம் சுனில் கிருஷ்ணனும் இதுவொரு ஆரோக்கியமான சமிக்ஞை என்று தெரிவித்தார். ஞாயிறு காலை புறப்பட்டு காரைக்குடியில் இருக்கும் சுனில் வீட்டுக்குச் சென்று அங்கிருந்து நாங்கள் இருவருமாக மதுரைச் சென்றோம். வீட்டிற்கு வந்ததில் இருந்து மதுரை செல்லும்வரை ஏறக்குறைய ஐந்து மணிநேரம் உரையாடிக் கொண்டிருந்தோம். படைப்புச் செயல்பாடு அந்தரங்கத்தன்மை உடையது. ஆனால் எழுத எண்ணும் ஒரு படைப்பு குறித்த சாத்தியங்களை விவாதங்களின் வழி விரிவு செய்து கொள்ள இயலும் என்ற நம்பிக்கையை சுனிலுடனான இந்த உரையாடல் அளித்தது. மதுரையில் சென்று இறங்கிய கொஞ்ச நேரத்திலேயே மழை பிடித்துக் கொண்டது. ஐந்தரைக்கு நிகழ்வு தொடங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. நா...

நாயகிகள் நாயகர்கள் குறித்து அகில்குமார்

சுரேஷ் பிரதீப்பின் நாயகிகள் நாயகர்கள்: மனித மனதின் பாவனைகளும், போலித்தனங்களும் வெளிப்படும் கணங்களை கண்டுணரும் சுரேஷ் பிரதீப்பின் கதைகள், வென்றெடுப்பது அல்லது வ...