ஒரு நாள் கழிந்தது சிறுகதை - எதிர்வினைகள் 2
கனலியில் வெளியான ஒரு நாள் கழிந்தது சிறுகதை ஒரு பெண்ணின் ஆசை ஆதங்கம் இயலாமை இவைகளை சுற்றி வருகிறது கதை.அது எவ்வாறு எரிச்சலாக பதற்றமாக கோபமாக பொறாமையாக எதிர்வனையாக வெளிப்படுகிறது என்பதும் அதை நிழலை போல தொடர்ந்து வருகிறது . இதில் பெண் , அதுவும் ஒரு சித்தாள் , அம்மா , மனைவி , நடுத்தர வயது என்று வேறு வால்யூமை நன்றாக கூட்டி வைத்திருக்கிறார் ஆசிரியர் :) கிழவிகளோடும் நிற்க விருப்பமில்லை , கல்லூரி பெண்களோடும் போய் சேர்ந்து நிற்க முடியாது பள்ளி தோழிகள் பார்த்து விடுவார்களோ என்ற பயம் ..அமுதாவும் வராமல் போய்விடுவாளோ என்னும் கைவிடப்படுதலின் தனிமை ... அதுவே அமுதா கடைசி நிமிடத்தில் வரும் போது திடீர் பாசமாகவும் மேஸ்திரி அப்புறமா அழுதுகொள் என்றதின் போது ஆழ்ந்த புறக்கணிப்பாகவும் , அந்த பெரியவர் உட்கார்ந்துகொள் என்று சொல்லும்போது கருணையான அடைக்கலமாகவும் அமுதாவிடமிருந்து வெளிப்படுகிறது . மேஸ்திரியை முன்வைத்து அமுதா அபிராமியிடம் நிகழும் அந்த உடைவு பெண்கள் ஏன் பெண்களாக திரள முடியாது என்பதற்கான நல்ல உதாரணம் :) இந்த சிக்கலான தப்பிக்கவே முடியாத அழுத்தும் சூழலில்...