கற்றாழைக் கிணறு - எதிர்வினைகள்
கற்றாழைக் கிணறு - சிறுகதை கற்றாழைக் கிணறு சிறுகதை குறித்து அரவிந்தன் அன்புள்ள சுரேஷ் பிரதீப் அவர்களுக்கு: இரவு நேரங்களில் பேய் கதை கேட்பதே ஒரு பரவச உணர்வு. அதை விட ஒரு படி மேல் நாட்டார் தெய்வங்களின் கதை கேட்பது.அவற்றை வழிபடும் முறை ஒரு அமானுஷ்ய நிகழ்வே.சுநில் அவர்கள் 'குருதி சோறு ' கதையில் எழுதியதை போல.காட்டேரி முதலியவை தெய்வமா ? பேயா ? என்ற சந்தேகம் பலருக்கும் உண்டு என்று தான் நினைக்கிறேன். கதையின் ஆரம்பத்தில் ஒரு கிராம தெய்வ கதையென்றே நினைத்தேன்.ஆனால் இது ஒரு பேய் கதையும் கூட.தொடர்ந்து பலி கேட்கும் உயிர் குடிக்கும் கதை.ரத்தம் குடித்து குடித்து கள்ளி கற்றாழையாக, அதாவது ஒரு பேய் ,தெய்வமாக மாறும் இடம்.உண்மையில் குறத்திக்கும்(வள்ளி) ,மயிலுக்கும்(முருகன்) உள்ள இணைவு அவளை முன்பே ஒரு தெய்வத்தன்மை படுத்துகிறது. மாணிக்கம், மூங்கில்வீரன்,கேசவன் மூவரும் ஒன்றே என்று படுகிறது.ஏனெனில் குறத்தி சாகும் முன்னர் மூங்கில்வீரனை சபிக்கவில்லை தன்னவனை சபிப்பதாகும் என்று அவள் நினைத்திருப்பாளோ? என்னவோ? தேடுபவருக்கு உண்மை ஒரு சிறு ஒளியுடன் கதைவை திறந்து வைத்துக்கொண்டு காத்துக்கொண்டே இருக்க...