அறிமுகம்
அன்புடன் தோழர்களுக்கு ,
மிகுந்த தயக்கத்திற்குப் பிறகு என்னை எடையிடுவதற்காக இந்த வலைப்பூவினை தொடங்கியிருக்கிறேன் . இது தாமதம் என்பது எனக்கு நன்றாகவே தெரியும் . என்னுடைய எழுத்துக்கள் சோதிக்கப்படாமல் இருப்பது இனியும் எனக்கு நல்லதல்ல . விமர்சனத்தை தாண்டி என் எழுத்துக்கள் உங்கள் மனதில் நிச்சயம் ஏதேனும் ஒன்றை உருவாக்கும் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது. என் எழுத்து அறிவினைத் தாண்டி மனதோடு உறவு கொள்ளும் தன்மை கொண்டதாக இருக்கும் என்று நம்புகிறேன். தொடக்கமாக நான் எழுதிய சில சிறுகதைகளையும் கவிதைகளையும் உங்கள் முன் வைக்கிறேன். நீங்கள் கொடுக்கும் பின்னூட்டங்களின் அடிப்படையிலேயே என்னுடைய முயற்சிகளின் திசையை நான் நிர்ணயிக்க முடியும்; என் எழுத்து கருத்து சொல்வதாகவோ எதையும் வலியுறுத்துவதவோ இருக்காது. அவை நம்முள் இருக்கும் கேள்விகளையும் கேவல்களையுமே பிரதிபலிக்கும் . உங்கள் விமர்சனத்திற்கென காத்திருக்கும் சுரேஷ் .
நன்றி
Comments
Post a Comment