இக்கதை ஒரு வரலாற்றுப் புனைவிற்கான (historical fiction) முன் முயற்சி எனச் சொல்லலாம் . கோரத்தில் கருணை கலக்கும் ஒரு சிறுகதை . இதனை நேரடியாக பதிவேற்ற முடியாததால் இக்கதையின் சுட்டியை (link) கொடுத்துள்ளேன் .
எழுத்தாளர் ஜெயமோகன் மகாபாரதத்தை முழுமையாக மறு ஆக்கம் செய்து எழுதிய நாவல் வெண்முரசு. இருபத்தாறு தனித்தனி நாவல்களாக எழுதப்பட்டுள்ள வெண்முரசை இணைத்து ஒரே நாவலாகவும் வாசிக்க இயலும். ஜனவரி 1, 2014 முதல் வெளிவரத்தொடங்கிய வெண்முரசு ஜூலை 16, 2020ல் முடிந்திருக்கிறது. இந்த நாவல் வரிசையை www.jeyamohan.in மற்றும் www.venmurasu.in ஆகிய தளங்களில் வாசிக்கலாம். அனைத்து நாவல்களும் கிண்டிலும் கிடைக்கின்றன. (வெண்முரசு நாவல்களை கிண்டிலில் வாங்குவதற்கான சுட்டி - https://amzn.in/dFTj7xN/) வெண்முரசு நாவல்களை வாசிக்க விரும்பும் வாசகர்களுக்காக ஒவ்வொரு நாவலிலும் நிகழும் மைய நிகழ்ச்சிகள் குறிப்புகளாக கீழே தரப்பட்டுள்ளன. ஒவ்வொரு தனிநாவலும் தன்னளவில் பல்வேறு வடிவப்புதுமைகளைக் கொண்டிருந்தாலும் வெண்முரசை ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது அதிலொரு நேர்க்கோட்டுத் தன்மை இருப்பதைக் காண முடிகிறது. நூல் ஒன்று - முதற்கனல் அஸ்தினபுரியின் அரசனாக பொறுப்பேற்கவிருக்கும் விசித்திரவீரியனுக்காக காசிநாட்டு இளவரசிகளான அம்பை, அம்பிகை, அம்பாலிகை மூவரையும் பீஷ்மர் சிறையெடுத்து வருகிறார். விசித்திரவீரியனின் இறப்பும், பீஷ்மர...
வாய் திறப்பதற்கு முன் கண் திறந்து விட வேண்டும் என்ற எண்ணம் வாய்க்கு முதலில் வந்துவிட்டதால் மூடிய இமைகளில் விழியுருண்டைகள் அசைந்து கொண்டிருக்க குணா லேசாக வாயைத் திறந்து விட்டான். நெடியுடைய எச்சில் இடக்கை மணிக்கட்டில் பட்டதும் துடித்துப் போய் எழுந்து கொண்டான். நல்லவேளை தலையணையில் எச்சில் படவில்லை என்ற நிம்மதி. பின் பெரியம்மா வீட்டில் தானே இருக்கிறோம் என்ற அலட்சியம். மணி ஆறடித்தது. வழக்கத்தை விட வெளிச்சம் குறைவு என எண்ணிக் கொண்டான். டிராயரை முழங்கால் வரை கழற்றிக் கொண்டு ஆற்றரெதிரே ஒன்னுக்கடித்தான். மார்பு வரை பாவாடையை உயர்த்திக் கட்டி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த பெண்ணொருத்தி பக்கத்தில் நீந்தியவளிடம் “இங்கேருடி கெலுத்தி மீன சொறுகி வெச்சிருக்கான்” என்றாள். “போடி” என தலையை நொடித்துக் கொண்டு டிராயரை உயர்த்திக் கொண்டான் குணா. ஷாலை இடுப்பில் இறுக்கி முடிந்தவாறு சுகன்யா துவைத்த துணிகளோடு எதிர வந்தபோது குணா இடதுகையால் பிரஷ்ஷை வாய்...
இதுவொரு சுயபரிசோதனைக் குறிப்பு. இணைய ஊடகங்களின் பெருக்கம் இலக்கியத்தின் மீது எத்தகைய தாக்கத்தை செலுத்துகிறது என்ற வகையிலான உரையாடல்களை சில ஆண்டுகளாகவே தொடர்ந்து பார்க்க நேரிடுகிறது. அவ்வுரையாடல்கள் தொழில்நுட்பரீதியான மாற்றங்கள் குறித்துத்தான் அதிகமும் அக்கறை கொள்கின்றனவே தவிர இலக்கிய வாசிப்பு, ரசனை, வாசகனில் படைப்பு உண்டாக்கும் தாக்கம் போன்ற சங்கதிகள் குறித்து அதிகமும் அக்கறை கொள்வதாகத் தெரியவில்லை. எழுதும் முறை மாறியிருக்கிறது. நான் எழுதத் தொடங்கிய காலத்திலிருந்து அலைபேசியைத்தான் பயன்படுத்துகிறேன். பேனா பிடிப்பதற்கு பதிலாக தட்டச்சு செய்யத் தொடங்கியது போல இரண்டு கட்டைவிரல்களை மட்டும் பயன்படுத்தி தற்போது எழுதுகிறோம். இதுபற்றி அதிகம் பேச ஒன்றுமில்லை. இந்த செயற்கை தொழில்நுட்பம் பற்றிய பேச்சுகள் அது இலக்கியத்தை அழித்துவிடுமா இல்லையா என்பதெல்லாம் கூட ஒரு வகையான 'சமகால' மோஸ்தரை ஒட்டிய பேச்சுகள்தானே தவிர அப்பேச்சுகளுக்கும் இலக்கியத்துக்கும் பெரிய தொடர்பில்லை. இலக்கியம் என்பது காலங்காலமாக படைப்பாளியின் உள்ளம் உணரும் உண்மையை மொழியின் ஒரு வெளிப்பாட்டு வடிவத்தில் பொதிந்து வைப்பதாகவே இரு...
Comments
Post a Comment