Friday 11 March 2016

அறிதல் தொடங்கும் கணம்


என் அறிதல்  தொடங்கும்  கணத்தில் உருமாறுகிறது உலகு
எனக்கென்று  விடிகிறது இவ்விரவு
என்னோடு நடக்கிறது  இந்நிலவு
ஏதேதோ  சொல்கிறது
இக்கனவு
என் அறிதல் தொடங்கையில் முடிகிறது
இச்சோர்வு
இருப்பது  இல்லாமலாக
மட்டுமே
இல்லாமலிருக்கையில்
இருப்பு  தேடியா அலைகிறேன்
எவ்வளவு  அள்ளியும் எஞ்சுகிறது ஒரு  துளி
எத்தனை  சொல்லியும்
மிஞ்சுகிறது  ஒருசொல்
எஞ்சுவதும் மிஞ்சுவதும் எனதென்று எடுக்கையில்
அள்ளியதும் சொல்லியதும்
அண்மிக்கையில்
எதை  எடுப்பேன்
எதை  தடுப்பேன்
சொல்லிவிட முடிவதில்லை
சொல்லாமல்  விடவும்
முடிவதில்லை
அறிதலின்  ஆழ் அழுத்தத்தில்
மூழ்கையில் உணர்வாய்
ஆழத்தின் வாசத்தையும்
அறிதலின்  ஆனந்தத்தையும்
அதுவரை
உன்  கனவை
என் உறக்கத்தில்
கண்டுகொள் அல்லது  கொள்ளாதே

No comments:

Post a Comment