கவலை வேண்டாம்
இன்னும் தடித்த சுற்றுச்சுவர் அமைக்கலாம்
தீப்பெட்டியும் மண்ணெண்ணெயும் பத்துகிலோமீட்டர் சுற்றளவுக்கு கிடைக்காமல் செய்யலாம்
பாதுகாப்பு ஏற்பாடுகளை
பலப்படுத்தலாம்
குறிப்பாக குழந்தைகளுக்கு
அனுமதி மறுக்க வேண்டும்
கவலை வேண்டாம்
வரைவு தயார்
இனி இதுபோல ஏதும் நடக்காது
அனைத்திற்கும் முன்
ஏதேனும் ஒரு சுவரில்
கரி படிந்திருக்கும்
வெள்ளையடிக்க வேண்டும்
கரையற்ற கட்டிடத்திற்குள்
நாளை நுழையலாம்
கவலைப்படாதீர்கள்
24.10.17
வேதனை
ReplyDelete