சில்லறைகளும் கேளிர்

உங்களால் நம்ப முடிகிறதா
இப்பெருவலைப் பின்னலில் நிகழ்ந்துவிட்ட ஆகச்சிறந்த சாத்தியங்களில் ஒன்று உங்கள் மனமென
நம்பாவிட்டாலும் அது மாறிவிடுவதில்லையே
அப்படியிருக்க
நீங்கள் மகிழ்வதும் துயர்வதும் எதற்காக ?
மறைப்பதும் மயங்குவதும் எதற்கஞ்சி?
காத்துக்கொள்ள நினைப்பதும் கட்டியெழுப்ப நினைப்பதும் எதை?
உங்கள் சிறுமையைக் கண்டு சிரிக்கிறேனே
இன்னுமா
இன்னுமா புரியவில்லை உங்களுக்கு
மலைப்பாறைகள் கொடுக்கப்பட்டிருக்க
மணற்பருக்களை பொறுக்கும் உங்களைக் கண்டு சிரிக்கமால் என்ன செய்ய
இரு திசைகளில் நீளும் கரங்கள் இருக்க இடுப்புடன் அதை சுருக்கிக்கொண்ட உங்களை என்ன செய்தால் தகும்
அன்பென்ற சொல்லை அர்த்தப்படுத்த அடுத்த பாலினம் தேடும் உங்கள் அறிவின்மையை எதால் அடித்தால் என் மனம் ஆறும்
உங்கள் சில்லறைத்தனத்துக்கெல்லாம் கோபப்படும் என் சில்லறைத்தனத்தை என்ன செய்து திருத்திக்கொள்வது

Comments

Popular posts from this blog

ஈசல் - சிறுகதை

சாரு நிவேதிதாவை வாசித்தல் 1

புக் பிரம்மா தென்னிந்திய இலக்கிய விழா - 2024