446 A - கடிதங்கள்
திரு சுரேஷ் அவர்களுக்கு வணக்கங்கள்
446 A - வாசித்தேன் , பதின் பருவம் உச்சம் பெரும் வயதில் ஒரு இளைஞன் மனதில் துளிர்விடும் , பெண் சார்ந்த இச்சைகளும் , அவள் உடல் சார்ந்து அவனுக்கு ஏற்படும் பருவக் கவர்ச்சியும் , அதன் கொண்டு அவன் சிந்தையில் ஏற்படும் பதற்றமும் , என மிக நுட்பமாக பயணிக்கிறது இந்த 446 A ,
ஆனால் இக்கதையின் நுட்பம் மொழி நடையில் மட்டுமே வெளிப்படுகிறதே ஒழிய , கதையின் வேரில் , அதன் பரிணாமத்தில் , அது விதைக்கவேண்டிய சிந்தனைசெறிவில் மிகவும் பின்தங்கிவிடுகிறது ,
பதின் வயதில் ஒரு பெண் சார்ந்து , ஆண் அறிய விளைவது எல்லாம் காமம் சார்ந்ததே , அவ்வயதில் , பெண் அவனுக்கு ஒரு ஈர்ப்பு, ஒரு கனவு , ஒரு போகம் , சுகம் தரும் நினைப்பு , அச்சூழ்நிலையில் அவன் , ஒரு பெண் மனதின் தரிசனத்தை அறிய முற்படுவதே இல்லை , அப்படி அறிய முற்படும் சூழலில் அவன் ஒரு சமநிலை அடைகிறான் அல்லது
இயல்பு நிலை உணர்கிறான் , பருவ வயதில் ஆணுக்கு ,ஒரு பெண்ணை முழுவதும் உணரக்கூடிய தருணம் அமைவதில்லை , பொதுவாக திருமணத்திற்கு பின்பே அதற்கான சூழல் அமைகிறது ,
இதன் பின்புலத்தை வைத்ததே இக்கதையை அணுகவேண்டி உள்ளது , பெண்ணை காமத்தின் மூலமாகவே அறிய வாய்ப்புள்ள வயதில் , அப்பெண்ணின் வேறொரு சித்திரத்தை , அவன் அறியாத ஒரு உருவ பரிமாணத்தை எதிர்கொள்ளையில் , ஒரு இளைஞன் மனதளவில் கடந்துசெல்லும் சிறு அதிர்வே 446 - A .
ஈரத்தின் மணத்தால் ஈர்க்கப்பட்டவன் , மனத்தின் ஈரத்தால் உலுக்கப்படுகிறான்
இக்கதையில் வாசகனுக்குரிய வாழ்வனுபவம் மிகவும் சிறுது , சிந்தனைக்கான களம் அரிது , வெறும் ஒற்றைப்படை பருவ தூண்டலின் எளிய பதிவாகவே நான் உணர்கிறேன் .
தங்களின் அடுத்த படைப்பிற்காக காத்திருக்கிறேன் ..
வே .அழகுமணிகண்டன்
அன்புள்ள சுரேஷ் அவர்களுக்கு
வணக்கம்
பாலினக் கவர்ச்சி மட்டுமே பெண்களை பார்க்கத்தூண்டுவதில்லை. நாம் ஏதாவது பேச விழைவதை பெண்ணிடமே அந்த வயதில் கூற விழைகிறோம். பேச நினைத்து மனதில் பேசிய வார்த்தைகள்தான் அதிகம். இது உங்களுடைய கதைகளில் வரும் ஒரு அம்சமாக இருக்கிறது. அது எனக்கு சற்று வியப்பாகவும் இருக்கிறது.
அவன் குற்ற உணர்ச்சி அடைவதாக கொள்ள முடியவில்லை. ஆனால் அந்த சமநிலையின்மை இருக்கிறது. எல்லாப் பெண்களும் சலனபடுத்துகிரார்கள். அவர்கள் இருக்கும் குறிப்பிட்ட இடத்திருக்கு போகும்போது மட்டும் அவன் நினைவுகளில் வருகிறார்கள். எதிர்பாராத மரணம் அந்த எண்ணங்களை ஒன்ருமில்லாதாக்கி விடுவிக்கிறது.
நன்றி
Dr. M. Dhandapani, PhD,
Asst. Professor (PB&G),
வணக்கம்
நலமா? 446A வாசித்தேன். ஒரு இளம் மாணவனின் அக உணர்வுகளின் கொந்தளிப்பை வெகு அழகாக சித்தரித்து இருக்கிறீர்கள்.
அன்புடன்
அனிதா
Comments
Post a Comment