நதிக்கரை இலக்கிய வட்டம்

நதிக்கரை இலக்கிய வட்டம்

திருவாரூர் நகரில் தொடர்ச்சியாக நவீன இலக்கியத்தை முன்னெடுக்கும் முயற்சிகள் எதுவும் நடைபெறுவதாகத் தெரியவில்லை அல்லது என் கவனத்துக்கு வரவில்லை.

திருவாரூர் மைய நூலகத்துடன் இணைந்து இலக்கிய விவாதங்களை நிகழ்த்தும் வகையில் நதிக்கரை என்ற பெயரில் இலக்கிய வட்டம் ஒன்றைத் தொடங்கலாம் என உத்தேசித்திருக்கிறேன். இப்போதைக்கு வட்டத்தின் ஒரேயொரு உறுப்பினன் நான் மட்டுமே🙂

நண்பர்களுடன் மின்னஞ்சலில் அலைபேசியில் என மணிக்கணக்காக இலக்கியம் பேசினாலும் சந்தித்து உரையாடுவதன் அவசியத்தை நான் கலந்து கொள்ளும் இலக்கிய நிகழ்வுகள் எனக்கு உணர்த்தியபடியே இருக்கின்றன.

என் சுய விருப்பத்தினாலும் திருவாரூர் மற்றும் சுற்று வட்டார பகுதியில் endangered species என்ற வகையில் வாழ்ந்து வரும் இலக்கிய வாசகர்களுக்கு ஒரு களத்தை உருவாக்கும் விதமாகவும் இந்த முயற்சியை மேற்கொள்கிறேன்.

முதற்கட்டமாக ஞாயிறுகளில் வாராந்திர கூடுகைகளை ஒருங்கு செய்யும் எண்ணமுள்ளது.

திருவாரூர்,மன்னார்குடி,திருத்துறைப்பூண்டி,நாகை,மயிலாடுதுறை,கும்பகோணம்,தஞ்சை என திருவாரூர் மற்றும் அதைச்சூழ்ந்துள்ள பகுதிகளில் இலக்கியத்தில்  ஆர்வமுள்ள நண்பர்கள் என்னைத் தொடர்பு கொள்ளுங்கள்.

என் மின்னஞ்சல்: sureshpradheep@gmail.com

அலைபேசி: 9965618861

இலக்கியத்தில் அறிந்து கொள்வதில் அடிப்படை ஆர்வம் என்பதை தாண்டி  வேறு எந்தவித முன் நிபந்தனைகளும் இல்லை.

நண்பர்கள் தங்கள் பக்கங்களில் பகிர்ந்தால் மகிழ்வேன்

Comments

Popular posts from this blog

ஈசல் - சிறுகதை

சாரு நிவேதிதாவை வாசித்தல் 1

புக் பிரம்மா தென்னிந்திய இலக்கிய விழா - 2024