நதிக்கரை நிகழ்வு ஒன்று - கதிரேசன்
நதிக்கரை இலக்கிய வட்டத்தின் முதல் கூட்டம் கடந்த ஞாயிறன்று இனிதே நடந்து முடிந்திருக்கிறது .உண்மையில் எதிர்பார்த்ததற்கு மேல் இரு மடங்க்காக ஆட்கள் வந்திருந்தனர் (எதிர்பார்ப்பு இரண்டு,நான் ,சுரேஷ் பிரதீப்,வருகை_நான்கு ). ஒருவருக்கொருவர் அறிமுகம் முடிந்ததும் முதலில் தீவிர இலக்கியத்திற்குள் எவ்வாறு வந்தோம்( மாட்டிக்கொண்டோம்) என்பதைகுறித்து பேச்சு துவங்கப்பட்டது .எளிய தலைப்பாதலால் அனைவாரலும் தயக்கம் இல்லாமல் பேச முடிந்தது .
நான் ஒன்றாம் வகுப்பில் பாபு சார் சொன்ன பைபிள் கதைகளில் ஆரம்பித்து பழைய மள்ளிகை கடைகளின் இடுக்களில் கிடந்த சிறுவர் மலர்,தங்க மலர், துப்பறியும் நாவல்களான,ராஜேஸ்குமார் ,சுபா, பின்னர் கல்கி ஜெயகாந்தன் .பின் ஜெயமோகன் என்று என் வாசிப்பு கடந்து வந்த பாதையைப்பற்றிப்பேசினேன்.
அடுத்த நிகழ்வில் நாவல் வாசிப்பு அதில் உள்ள சவால்கள்,ரசனை,நாவலின் வகைமைகள் குறித்து பேசப்பட்டது
நாவலின்(படைப்புகள்) வகைமைகளைக் கண்டு கொள்ளல் குறித்த சுரேஷ் பிரதீப் விளக்கம் :
அடிப்படையில் நாவல் என்பது சமூகம் மேல் வைக்கப்படும் ஒரு விமர்சனம்.
இயல்புவாத படைப்புகள்;
நாவலாசிரியனை படைப்புக்குள் பார்க்க இயலாது.நாம் வாழும் வாழ்வின் இருத்தலை எடுத்துக்காட்டுவது
உதராணம்; ஆரோக்ய நிகேதனம்,
எதர்த்தவாத படைப்புகள்:
ஆசிரியர் படைப்புக்குள் ஒரு பாத்திரமாக வருவதை நேரடியாகவோ மறைமுகமாகவோ ஊகித்து அறிவதற்கான வாய்ப்புகள் இருக்கும்
உதாரணம்.,ஆதிரை
மீபுனைவு
ஒரு படைபுக்குள் மற்றொரு படைப்பு அல்லது ஒரு புனைவிற்குள் புனைவை பற்றி விவரிக்கும், எழுதும் படைப்பு
உதாரணம்;விஷ்ணுபுரம்,ஒளிர்நிழல்
அடுத்த நிகழ்வில் சிறுகதைக்கான வடிவம் பற்றி விவாதிக்கப்பட்டதுக்கப்பட்டது
விவதத்திற்கு எடுத்து கொண்ட சிறுகதைகள்,பொன்னகரம்-புதுமைப்பித்தன் ,விமோசனம்_அசோகமித்ரன் ,நகரம்-சுஜாதா
பொன்னகரம் சார்ந்த விவாதம்
படைப்பு வெளிவந்த காலத்தை ஒப்பிடுகையில் அது பேச எடுத்துக்கொண்ட கரு முக்கியமானது,வேறு எவ்வகையில் எழுதிருயிந்தாலும் வடிவம் இந்த அளவிற்கு சரியாக பொருந்தியிருக்காது,
விமோசனம்
ஆண் பெண் மீது செலுத்தும் அதிகாரம் என்பது ஒரு பாவனை,ஆண் பெண் உறவுகளில் இந்த பாவனை உடையும்போது குடும்ப அமைப்பு சிதைகிறதா?,சமூக அடுக்களில் அதிகாரத்தின் எல்லை ,அது உடையும் தருணம் குறித்து விவாதிக்கப்பட்டது
நகரம்
முழுக்கவும் சிறுகதை வடிவத்திற்கு பொருத்தமான கதை, காலச்சூழலை ஏற்றுக்கொள்ள முடியாத தாய் தன் மகளை இழந்த தருணம்
இவ்விவாததில் கடவுளும் கந்தசாமி பிள்ளையும்-புதுமைப்பித்தன்,மாடன் மோட்சம் –ஜெயமோகன் கதைகள் குறித்த ஒப்பீடு விவாதிக்கப்பட்டது
அடுத்த விவாதம்.
வரலாற்றை எழுதுவது வாசிப்பது;
புராணங்கள் ,தொன்மங்கள் ,நாட்டரியல் கூறுகள், இவை அனைத்தையும் அடிப்படையாகாக்கொண்டே வரலாறு எழுதப்படவும் படிக்கப்படவும் வேண்டும்.இந்திய வராற்றை ஆராய்ந்த மார்க்சிய ஆய்வுகளின் நிறை,குறைகள் பற்றி பேசப்பட்டது
இறுதியாக
குறுநாவல் அறிமுகம்
தாஸ்தாய்வொஸ்கியின் அழையா விருந்தாளி.
இந்நாவலின் சுருக்கத்தை சொல்லிவிட்டு.நாவல் எனக்குள் எழுப்பிய கேள்வியைப்பற்றிப்பேசினேன்
இரண்டு வகையான மனம்
நாம் வளர்ந்து வந்த மரபின் மனம்
அனுபவங்கள் இலக்கியங்கள் சார்ந்த மனம்
முதல் மனத்தை வென்று இரண்டாம் மனம் மேழேழும்பி வரவேண்டிள்ளது,அது சறுக்கும் ,இடங்கள் தன்னை முற்போக்காக காட்டிக்கொள்ள விழைபவன் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் முதலியன குறித்து விவாதிக்கப்பட்டது.
நூலகத்தில் ஆயிரக்கணக்கான புத்தகங்கள் நடுவே அமர்ந்து அவற்றைபற்றி உரையாடுதல் என்பது உன்மையில் பேரானந்தமாகவே இருந்தது
சீரான நீர்த்துப்போகத விவாதம். அடுத்த வாரத்திற்கான நதிக்கரை சந்திப்பிற்காக இப்போதே மனம் நீச்சல் அடிக்கத்துவங்கிவிட்டது!
Comments
Post a Comment